தொகுதிக்கு வரலைன்னு சொன்னது குற்றமா? செட் தேர்வு முடிவு, காவிரி அனைத்து கட்சி கூட்டம்,திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் இன்னும் பல செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தொகுதிக்கு வரலைன்னு சொன்னது குற்றமா? செட் தேர்வு முடிவு, காவிரி அனைத்து கட்சி கூட்டம்,திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் இன்னும் பல செய்திகள்

http;//www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
a] * ஏங்க தொகுதிக்கு வரலைன்னு கேட்டது குற்றமா.. எம்.எல்.ஏ கருணாஸ் புகாரில் ஒருவர் கைது!* [15]
b] *செட் தேர்வு முடிவுகள் வெளியீடு* [17]
C) *பணம் வசூலிக்காமல் வாகனங்கள் செல்ல அனுமதித்து சுங்கச் சாவடி ஊழியர்கள் நூதன போராட்டம்* [22]
D) *ஆணுறுப்பை வெட்டிய தலித் பெண்* (11)---e) * 27 to 30 *டாஸ்மாக் விடுமுறை* (13)
♈🇮🇳🌴1] *காவிரி பிரச்சனையில், திமுக (செவ்வாய்க்கிழமை) கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நல கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீடிக்கின்றது*
♈🇮🇳🌴2] *யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் (திங்கள் கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் அரசு செயலகம், வடமாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு, ஏ9 நெடுஞ்சாலையை மறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமும், வவுனியாவில் விரிவுரைகளைப் பறக்கணித்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.யாழ் அரச செயலகத்தின் பிரதான நுழைவாயில்களை மறித்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக அரசு பணிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. சாலை மறிப்பு போராட்டம் காரணமாக ஏ9 நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிப்புடன் முடிவுக்கு வந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் காவல் கடமைக்கென எவரும் சமூகமளித்திருக்கவில்லை.இதற்கிடையே சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன. இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்*
♈🇮🇳🌴3] *நாட்டின் மனிதநேய நெருக்கடியை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெனிசுவேலா அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறது. உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை, அதற்கான காரணங்களுக்கு தீர்வு காண சோசலிச அரசு மறுப்பதாலும், அரசியல் எதிர்ப்பாளர்களை அரசு மிரட்டுவதாலும், தீவிரமடைந்திருப்பதாக அந்த அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.பிரச்சனைகளின் அளவை தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருவதாக அதிபர் நிக்கோலாஸ் மாதுரோவை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் விமர்சித்துள்ளது.அதிபரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தடுத்துவிட்டதன் மூலம், அதிபர் ஒரு அதிரடி ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்திவிட்டதாக எதிர்கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்றம் அதிபர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது*
♈🇮🇳🌴4] *லெஸ்போஸ் தீவில் உள்ள அகதிகள் மற்றும் குடியேறிகள், அங்குள்ள தாற்காலிக அலுவலகங்களுக்கு தீ வைத்துவிட்டதாக கிரேக்க போலீசார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 70 ஆர்ப்பாட்டக்கார்கள், தங்களது தஞ்சக் கோரிக்கை அடங்கி விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்து இந்த நடவடிக்கையில் இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அருகிலுள்ள பல்கேரியாவிலும், ஆயிரக்கணக்கான குடியேறிகளால் பிரச்சனை உள்ள நிலையில், ஹர்மன்லி நகர் அருகே உள்ள அகதி முகாமில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.தங்களது விருப்பமில்லாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், அங்குள்ள சூழல் மிக மோசமாக இருப்பதாகவும் கூறி ஆப்கன் மற்றும் சிரியாவைச் சேர்ந்த சுமார் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்*
♈🇮🇳🌴5] *புவியை வெப்பமடையச் செய்யும் கிரின்ஹவுஸ் வாயு, கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றின் வளிமண்டல நிலைகள் இந்த ஆண்டு முழுவதும் மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக இருக்கின்ற முதல் ஆண்டாக 2016 அமையும் என்று பருவகால மாற்றத்தை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலநிலையின் எதார்த்தத்தில் ஒரு புதிய காலக்கட்டத்தில உலகம் நுழைந்திருக்கும் நிலையில், இந்த வாயுக்கள் வெளியேற்ற அளவுகள் உலக அளவில் பல தலைமுறைகளாக கீழிறங்க போவதில்லை என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.வளி மண்டலத்தில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, தொழில்புரட்சி உருவான காலகட்டத்துக்கு முன்பு இருந்ததை விட இப்போது 44 சதவீதம் அதிகமாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உள்பட பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பு விபரங்களையும் உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வழங்கியுள்ளது.பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகின்ற புதியதொரு ஒப்பந்தம் அடுத்த மாதத்திலிருந்து அமலாக இருக்கிறது. ஆனால், அதனுடைய கட்டுப்பாடுகள் உடனடியாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை*
♈🇮🇳🌴6] *கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது என பெல்ஜியம் தெரிவித்துள்ளது*

♈🇮🇳🌴7] *கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கு (பத்து லட்சம்) மேலான அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது*
♈🇮🇳🌴8] *ஞாயிற்றுக்கிழமை இரவு போதை மருந்துக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றுவிட்ட 200-க்கு மேற்பட்டோரை வியட்நாமின் தெற்கு பகுதி காவல்துறையினர் தேடிவருகின்றனர். தீயணைப்பான் மற்றும் தடிகளை பயன்படுத்தி கான்கிரிட் சுவர்களையும், சன்னல்களையும் உடைத்து, அந்த மறுவாழ்வு மையத்தில் இருந்த 500-க்கு மேற்பட்டோர் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உள்ளூவாசிகள் வீட்டிலேயே இருக்கவும், வீடுகளை பூட்டி வைத்திருக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்த மறுவாழ்வு மையத்தில் சுமார் 1500 பேர் இருக்கின்றனர்.அதிகமானோர் அவ்வப்போது தப்பிவிடுகின்ற வியட்நாமில் இருக்கும் இத்தகைய மறுவாழ்வு மையங்களில் காணப்படும் மோசமான வசதிகளை மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்து வருகின்றன*
♈🇮🇳🌴9] *சீனாவின் வட மேற்கில் அமைந்துள்ள யுலின் நகரத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*
♈🇮🇳🌴10] *காதலனுடன் உறவில் இருந்ததை கண்டித்த தாயை காதலன் உதவியுடன் கொலை செய்த 14 வயது சிறுமிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அமெரிக்காவின் பென்சில்வோனியாவை சேர்ந்த ஜமி சில்வோனக்(14) என்ற சிறுமி தனக்கு 18 வயது என்று கூறி ராணுவ முகாமில் பணிபுரியும் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.ஜமி பார்ப்பதற்கு பெரிய பெண் போன்ற தோற்றத்தை கொண்டதால் அவரை ஏமாற்றி காதலித்து வந்தார். ஒருநாள் ஜமி அவரது வீட்டில் காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது, அதை ஜமியின் தாய் பார்த்துவிட்டார்.பின்னர் ஜமியின் தாய், ஜமி காதலனை கண்டித்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். காதலனை பிரிய முடியாத ஜமி தனது தாயை காதலன் உதவியோடு கொலை செய்ய திட்டமிட்டு. அதன்படி கொலை செய்து காரில் வைத்து ஒரு இடத்தில் விட்டுவிட்டனர்.இதுகுறித்து காவல்துறையினர் ஜமியிடன் விசாரணை நடத்தியபோது முதலில் மறைத்த ஜமி இறுதியில் ஒப்புக்கொண்டார். ஜமிக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது. ஜமியின் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது*

♈🇮🇳🌴11] *தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனின் ஆணுறுப்பை, கத்தியால் இளம்பெண் வெட்டிய விவகாரம் அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், ரோதக் எனும் கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய ஒரு தலித் இளம்பெண், நேற்று இரவு இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக, தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு இடத்திற்கு ராயிஸ்(23) என்ற முஸ்லீம் வாலிபர் வந்துள்ளார். அவர், கையில் கத்தியோடு அப்பெண்ணை பயமுறுத்தி, வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றுள்ளார்.  ஆனால், அவரிடமிருந்து தப்பிக்க போராடிய அப்பெண், ராயிஸ் கையில்  இருந்த கத்தியை பிடுங்கி அவரின் ஆணுறுப்பை வெட்டி விட்டார்.வலியால் துடித்த ராயிஸின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய கிராம மக்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதி போலீசார், ராயிஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் தலித் என்பதாலும், தாக்கப்பட்டது ஒரு முஸ்லீம் வாலிபர் என்பதாலும், சாதி மோதல்களை தடுக்கும் பொருட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்*

♈🇮🇳🌴12] *சினிமாவுக்காக எதை எதையோ இழந்தவர்கள் ஏராளம். அந்த வரிசையில் ரித்திகா சிங் பாக்ஸிங்கை சினிமாவுக்காக கைவிட்டுள்ளார். அடிப்படையில் பாக்ஸரான ரித்திகா தன்னுடைய மதி கேரக்டருக்கு பொருந்துவார் என்று தான் ரித்திகா சிங் இறுதிசுற்று படத்தில் தேர்வு செய்யப்பட்டார்.ஆண்டவன் கட்டளை படத்திலும் ரித்திகாவுக்கு நல்ல பெயர் கிடைக்க தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றனர்.எனவே இனி பாக்ஸிங் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் ரித்திகா. அடுத்து விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்கிறார்.பாக்ஸிங்கில் பங்கேற்றால் நான்கு சுற்றுகள் வரை விளையாட வேண்டும். அப்போது முகத்தில் காயப்பட்டால் அது படங்களை பாதிக்கும். எனவே இனி பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. வீட்டிலேயே பிராக்டீஸ் மட்டும் பண்ணப்போகிறேன் என்று கூறியிருக்கிறார் ரித்திகா சிங்*

-         .          -.     -      .              .     ,                 .13] தீபாவளி மாமுல் வசூல் சிவகாசியில் அமர்க்களம்.சுமார்  100 கோடி போச்சு என புழம்பும் பட்டாசு தொழிலதிபர்கள்.

♈🇮🇳🌴14] *பாகிஸ்தான் குவெட்டா நகரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் காயமடைந்தனர். 200 பயிற்சி போலீசாரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன* - பலுசிஸ்தான்: 200 போலீசார் பத்திரமாக மீட்பு
♈🇮🇳🌴15] *தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாசிடம் கேட்டு தொலைபேசியில் தகராறு செய்த நபர் இப்போது போலீசில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளாராம். நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு சமீபத்தில்தான், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கினார், நடிகர் கருணாஸ். அதிருஷ்டவசமாக அதிமுக கூட்டணிக்கு அழைக்க, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அக்கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ். எம்எல்ஏவான பிறகும், சென்னையிலேயே தங்கிவிடுகிறார் கருணாஸ். தொகுதி பக்கம் அடிக்கடி செல்வதில்லை என தொகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், கருணாஸ் 2 நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். "தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது" என அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர் கருணாசுக்கு மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீசில் கருணாஸ் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை கைது செய்தனர்*
♈🇮🇳🌴16] *குன்னூர்-மேட்டுப்பாளையத்திற்கு தினசரி மலை ரயில்  இயக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல் மலை ரயில் மேட்டுப்பாளையம்  புறப்பட்டது. குன்னுார் வெலல் கிராசிங் அருகே இன்ஜினில்  உந்துசக்தி குறைவால் பாதியில் ரயில் நின்றது. இதுகுறித்து அருகில் உள்ள  ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ஊழியர்கள் சென்று  ரயிலில் உந்துசக்தி குறைபாட்டை சரி செய்த பின் ரயில் புறப்பட்டது. குன்னூர்  லெவல் கிராசிங் அருேக மலை ரயில் நின்றதால் சாலையின் இருபுறமும் வாகன  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவ்வப்போது மலை ரயில் இன்ஜினில்  உந்து சக்தி குறைவால் ரயில் பழுதடைவது வாடிக்கையாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்*

♈🇮🇳🌴17] *தமிழகத்தில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட் தேர்வு முடிவுகள் அன்னை தெரசா பல்கலைகழகம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் செட் தேர்வு பிப்ரவரி மாதம் நடந்தது. அதில் ஏராளமானோர் தேர்வு எழுதினர். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இந்த தேர்வை நடத்தியது.  செட் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு www.motherteresawomanuniv.ac.in, www.setresults2016.in என்ற இரு இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் தேர்வு எண் உள்ளிட்ட தகவல்களை அளித்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. பிற்பகல் முதல் தேர்வர்கள் தங்களின் செட் தேர்வு மதிப்பெண்களை அறிந்துகொண்டனர்*

♈🇮🇳🌴18] *சிவகாசியில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 4 பட்டாசுக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது*
♈🇮🇳🌴19] *சென்னை தண்டையார்பேட்டையில் சோஃபா தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்*
♈🇮🇳🌴20] *மிஸ்திரி நீக்கம்: பிரதமர் மோடிக்கு ரத்தன் டாடா கடிதம்*
♈🇮🇳🌴21] *தீபாவளிக்கு இன்று ஒரே நாளில் 91,565 பேர் அரசு பஸ்சிற்கு முன்பதிவு* 24-10-2016
♈🇮🇳🌴22] *பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துரை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்துர் பேட்டை சுங்கச் சாவடி ஊழியர்கள் போனஸ் கேட்டு வந்துள்ளனர். மேலும், மத்திய அரசு நிர்ணயித்தபடி 72 வேலை நாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கோரியும், சுங்கச் சாவடி மைய நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தனர். ஆனால் நிர்வாகம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தியது.இதனை கண்டித்து திங்கள்கிழமை காலை முதல் வசூலித்த தொகையை சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் வழங்காமல் நிறுத்தி வைத்ததோடு, சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களிடம் கட்டணங்களை வசூலிக்காமல் தடுப்புகளை திறந்துவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர்*

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியாகும்.

தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியிடப்படாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறுகையில், ''தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால், விண்ணப்ப பரிசீலனை காலம் நீண்டு விட்டது. திட்டமிட்டபடி, நவ., 6ல் தேர்வு நடக்கும். இரு தினங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here