ரூ. 51 கோடியில் ஊழியர்களுக்கு 1260 கார்கள், 200 வீடுகள் தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி!!!
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தனது தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடி மதிப்பீட்டில் 400 வீடுகள் மற்றும் 1,260 கார்களை தீபாவளி போனசாக வழங்கியுள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான சாவ்ஜி தோலாக்கியா இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பரிசுகளை வழங்கியுள்ளார்.
இவரது நிறுவனமான ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு இது 25வது ஆண்டு. இந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்களில் 1,716 தொழிலாளர்கள், சிறந்த தொழிலாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
இவர் கடந்த 2011ல் இருந்து தனது தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். 200 பேருக்கு வீடு கொடுத்தார்.
இந்த ஆண்டும் அவர் தன் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போன சாக கொடுக்க முடிவு செய் தார். இந்த பரிசுகளைப் பெற 1660 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் 400 பேருக்கு வீடு பரிசாக கொடுக்கப்பட் டது. 1260 பேருக்கு கார்களை தீபாவளி போனஸ் பரிசாக வைர வியாபாரி தோலாகியா கொடுத்துள்ளார்.
குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதாலா கிராமத்தைச் சேர்ந்த தோலாக்கியா தனது மாமாவிடம் இருந்து கடன் பெற்று வைரத் தொழிலில் இறங்கியுள்ளார்.
ஒரே நாளில் இந்த சொத்துக்கள் இவருக்கு சேரவில்லை, கடின உழைப்பின் மூலம் சேர்த்து இருந்தார். இதே உழைப்பை தனது மகனும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தனது மகன் திரவியாவுக்கு 3 செட் ஆடைகள், அவசரத்திற்குப் பயன்படுத்த ரூ.7,000 கொடுத்து கொச்சினுக்கு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக