நண்பகல் செய்திகள்(பிஞ்சு குழந்தையையும் விட்டுவைக்காத பணம்/ கலைஞரை சந்தித்தார் அழகிரி /டெல்லியில் பாஜக ஆஎஸ்எஸ் ஆலோசனை/தண்டுவடம் மீள் ஈருவாக்கம் /அண்ணா நூலகம் நீதிமன்றம் இறுதி கெடு போன்ற செய்திகள்)04/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நண்பகல் செய்திகள்(பிஞ்சு குழந்தையையும் விட்டுவைக்காத பணம்/ கலைஞரை சந்தித்தார் அழகிரி /டெல்லியில் பாஜக ஆஎஸ்எஸ் ஆலோசனை/தண்டுவடம் மீள் ஈருவாக்கம் /அண்ணா நூலகம் நீதிமன்றம் இறுதி கெடு போன்ற செய்திகள்)04/10/2016


A] *பணத்துக்காக பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு விருந்தாக்கிய கொடூர தாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய வகுப்பு ஆசிரியை .* [7]

*ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமியை காப்பாற்றிய இளம் பெண்* [11]

*வெளிநாடு பறக்கும் பிரதமருக்கு உள்ளூர் பிரச்சினை தெரியுமா? – குஷ்பு. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்*

*டெல்லியில் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆலோசனை.ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர்களும் பங்கேற்பு*
♈🇮🇳🌴1] *தண்டுவடத்தை மீளுருவாக்கும் வரிக்குதிரை மீன், முடமாகும் மனிதரை நடக்க வைக்க உதவுமா?தன்னுடைய தண்டுவடத்தை மீளுருவாக்கி கொள்ளும் திறனுடைய மீன்களின் ஓரினம், முடமாகும் மனிதர்களை மீண்டும் நடக்க வைப்பதற்கு முக்கியமாக உதவலாம் என்று அமெரிக்காவின் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். வரிக்குதிரை மீன் அதனுடைய தண்டுவடம் துண்டிக்கப்பட்டுவிட்டால் இரண்டு முனைகளை இணைக்கும் வகையில், இணைக்கின்ற திசு வளர்ச்சி அம்சம்-ஏ எனப்படும் ஒரு வகை புரதத்தை பயன்படுத்துகிறது.90 சதவீதம் அதே புரதத்தின் சாயல் கொண்ட புரதப் பதிப்பைத்தான் மனிதரும் கொண்டுள்ளனர்.நம்முடைய தண்டுவடத்தை மீளுருவாக்கி கொள்ள முடியாத நிலையில், வரிக்குதிரை மீன்களில் தண்டுவடத்தை மீளுவாக்கி கொள்வதில் இந்த புரதம் செயலாற்றுகிறது,இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பது பற்றி இந்த ஆய்வாளர்கள் குழு சோதனை மேற்கொண்டு வருகிறது.வடுக்களின் திசு உருவாகுவது, பாலூட்டிகளில் குணமாதல் சிக்கலான விடயமாக இருப்பதற்கு ஒரு காரணமாகும்*
♈🇮🇳🌴2] *குர்து இனத்திற்கு ஆதரவான ஹச்டிபி கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை துருக்கிய ஆட்சியாளர்கள் கைது செய்திருக்கின்றனர். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சலஹாடீன் டெமிர்டாஸ் மற்றும் ஃபிஜின் யுக்செக்டாக்கின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று போலிசார் கூறுகின்றனர்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் கடத்தப்பட்டிருப்பதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் எர்டுகுருல் குர்க்சு பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். முகநூல் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இஸ்தான்புல்லில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.சட்டபூர்வமற்ற வகையில் இயங்கிவரும் குர்து இன ஆயுதப்படையான பிகேகேயுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ஹச்டிபி கட்சியை முன்னதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்து வந்த வழக்கு தொடுக்கப்படுவதில் இருந்து தரப்பட்டு இருந்த சட்டப்பூர்வ விதிவிலக்கை அகற்றிவிடும் சர்ச்சைக்குரிய அரசியல் சட்டத் திருத்தத்தை அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் இவ்வாண்டு தொடக்கத்தில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது*
♈🇮🇳🌴3] *சமீபத்தில் நியுசிலாந்து அணி இந்தியா வந்து விளையாடி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து நாடு திரும்பியது, அதுபோல இங்கிலாந்தும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழக்கும் என முன்னாள் இந்திய வீரர் கங்குலி கூறியுள்ளார்*
♈🇮🇳🌴4] *விஜய் ஆண்டனி வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி: எஸ்.ஏ.சந்திரசேகர்.விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் 'சைத்தான்'. விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகிவரும் சைத்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் 5 நிமிட படக்காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய எஸ். ஏ. சந்திர சேகர், “சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளாரான விஜய் ஆண்டனியிடம் அப்பொழுது உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அக்னி என கூறினார். உங்கள் நிஜப்பெயர் விஜய் ஆண்டனி என்ற பெயரே நன்றாக உள்ளது. விஜய் ஆண்டனி என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்துங்கள் என கூறினேன். அவரும் அதற்கு சம்பதித்தார்.விஜய் ஆண்டனியாக இருந்தாலும், என் மகன் விஜயானாலும் சரி,  அவர்களின் வளர்ச்சி கண்டு எனக்கு ஒரே அளவு மகிழ்ச்சி தருகிறது. நான் பெயர் வைத்தவர்கள் சோடை போகவில்லை.” என்று கூறினார் எஸ். ஏ. சந்திர சேகர்.இப்படத்தில் விஜய் ஆண்டனி சைக்காலஜிகல் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞராக நடிக்கிறார். சென்னையில் தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது*

♈🇮🇳🌴5] *புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் குண்டூசியை விழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்புராஜ் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திடீரென குண்டூசியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இந்தத் தகவலை அறிந்த சிறை காவலர்கள், கைதி அப்புராஜை மீட்டு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது*

♈🇮🇳🌴6] *சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகந்தி, யோவான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் திங்கட்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 4 நாட்களில் தனியாக இருந்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு கொலையில் மட்டுமே குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு கொலைகளில் குற்றவாளிகள் யார் என்பது இதுவரை துப்பு துலக்கப்படவில்லை*
♈🇮🇳🌴7] *ஹைதராபாத்தில் பணத்துக்காக பெற்ற பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு தாய் ஒருவர் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இரட்டை சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-, வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 40 வயதான ஜாஃபர் என்பவரும் 18 வயதை கூட எட்டாத அவரது மகனும் சிறுமிகளை மிரட்டி ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் கூடுதல் அதிர்ச்சியாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்களின் அம்மாவே பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு தந்துள்ளார். வெளியே கூறினால் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். உயிருக்கு பயந்த சிறுமிகள் நடப்பதை வெளியே கூறாமால் தவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் அப்பா- மகனின் தொல்லையை தாங்க முடியாத ஒரு சிறுமி தனது வகுப்பாசிரியையிடம் கூறி கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை தனது குழந்தைகள் உரிமை தொண்டு நிறுவனத்தின் மூலம் ஷம்ஷாபாத் போலிஸ் கமிஷனரிடம் விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமிகளிடம் விசாரித்த காவல்துறையினர் பணத்திற்காக அம்மாவே தான் பெற்ற குழந்தைகளை பக்கத்து வீட்டுகாரர்களுக்கு விருந்தாக்கியதை உறுதிசெய்தனர்*

♈🇮🇳🌴8]     _*🔷🔹TNPTF விழுதுகள்🔹🔷*_

*பொதுச்செயலாளர் செய்தி*

தமிழ்நாட்டு ஆசிரியர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மகத்தான நமது பேரியக்கம் ஆசிரியர்களின் நியாயமான 15 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி மூன்றுகட்ட தொடர் களப் போராட்டங்களை அறிவித்தவுடன், இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றி தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் நமது இயக்கத்தின் போர்ப்பரணியை பாசமிகு ஆசிரிய சகோதர சகோதரிகளிடம் உணர்வு பூர்வமாக எடுத்துச்சென்று இயக்கப் பாகுபாடின்றி அனைத்து ஆசிரியர்களின் பேராதரவைப் பெறுவதில் முழு வெற்றியை ஈட்டியிருக்கின்ற இணையற்ற களப் போராளிகளாம் வட்டார, நகர, மாவட்டக் கிளைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் முண்ணணித் தோழர்களுக்கு மாநில மையத்தின் வீரஞ்செறிந்த வாழ்த்துக்கள்.

மூன்று கட்டப் போராட்டத்தில் இன்று(4.11.16) முதல் போராட்டம். இன்று மாலை 5மணிக்கு தமிழகத்தின் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள்  ஆவேச முழக்கங்களுடன் அணி அணியாய், அலை அலையாய் ஆர்ப்பரித்து வருகின்ற காட்சி ஆட்சியாளர்களின் கேளாச் செவிகளையும் சென்றடைய வேண்டும்.

*"மண்டியிட்டு உயிர் வாழ்வதைவிட எழுந்து நின்று எதிர்த்துப்போராடி மடிவது மேல்"*

என்ற வீர வரிகளுக்கு வடிவமாக, விண்ணதிர மண்ணதிர முழக்கமிட்டு வரலாறு படைக்க வேண்டும்.

யாருடைய தயவும், கருணையும் நம்முடைய உரிமைகளைப் பெற்றுத்தராது.

அப்படித் தந்ததாக இதுவரை வரலாறும் கிடையாது.

நம்முடைய வலிமை மிக்க போராட்டங்களே உரிமைகளைப் பெற்றுத்தரும் ஈட்டிமுனை.

இன்று ஈட்டிமுனைகள் உயரட்டும்!
இழந்த உரிமைகள் மீளட்டும்!

*வாழ்த்துக்களுடன்*
*செ.பாலசந்தர்,*
*பொதுச்செயலாளர்*

♈🇮🇳🌴9] *எல்லை தாக்குதல்; ஜம்முவில் நிலையை ஆய்வு செய்தார் மெகபூபா முப்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்*
♈🇮🇳🌴10] *காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி உமர் காலித் கைது*
♈🇮🇳🌴11] *ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராத விதாமாக ஆழ்துளை கிணற்றில் விழந்துள்ளது. இதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சிடைந்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை காப்பாற்றுவதற்காக அருகில் பள்ளம் தோண்டி காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை.
இதன் காரணமாக தீயணைப்பு படையினர் அருகில் இருந்த 17 வயது சிறுமியை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.அதன் பின் முதன் முறையாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி இறக்கப்பட்ட சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் காரணமாக, மேலே கொண்டு வரப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அச்சிறுமி உள்ளே இறக்கப்பட்டார்.ஆனால் இம்முறை அச்சிறுமி, ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த 2 வயது குழந்தையை மேலே தூக்கி கொண்டுவந்து மீட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது*
♈🇮🇳🌴12] *சீனா அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை ஏவி சோதனை நடத்தி வெற்றி*
♈🇮🇳🌴13] *பாதுகாப்பு கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனு குறித்து 2 வாரத்தில் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறை 2 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 வாரத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றால் திருமாவளவன் நீதிமன்றத்தை அணுகலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருமாவளவன் வழக்கு தொடர்ந்திருந்தார்*
♈🇮🇳🌴14] *குருகிராமில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு முகமூடிகள் அணிவித்து அனுப்புமாறு பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் செய்தி அனுப்பியுள்ளது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் முகமூடி அணிந்து பள்ளிக்கு சென்றனர்*
♈🇮🇳🌴15] *அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் இறுதி கெடு*
♈🇮🇳🌴16] *கோவையில் கடந்த மாதம் வன்முறையில் ஈடுபட்டதாக 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகேந்திரன், சதீஷ்குமார், மோகன்ராஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இந்து முன்னை பிரமுகர் சசி குமார் இறுதி ஊர்வலத்தின் போது 3 பேரும் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்*
♈🇮🇳🌴17] *காஞ்சிபுரம்: மண்ணிவாக்கத்தில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் காப்பகத்துக்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் காப்பகத்தில் இருந்த 25 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்*
♈🇮🇳🌴18] *விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை வங்கியில் 2012ம் ஆண்டு ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம் செய்து போலி கையெழுத்திட்ட புகாரில் அஞ்சலை, ஜெயமாலினி என்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்*
♈🇮🇳🌴19] *பெங்களூர்: ஒசக்கோட்டை தாலுகா கட்டிஹேனஹல்லிபகுதியில் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  பறிமுதல் செய்யப்பட செம்மரக்கட்டைகள் மதிப்பு ரூ.1 கோடி என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்*
♈🇮🇳🌴20] *மத்தியப் பிரதேசம் மாநிலம் சிங்கராவுளி மாவட்டத்தில் உள்ள மஜ்ஹவுளி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 31 நிலக்கரி வேகன்கள் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. மீட்புப்பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்*
♈🇮🇳🌴21] *திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3ம் தெருவில் வசிக்கும் அப்துல் காதர் என்பவர் மனைவி தஸ்லிமா (25) வை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தொடர்ந்து அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்*
♈🇮🇳🌴22] *சென்னை ஆதம்பாக்கத்தில் ஓட ஓட விரட்டி தந்தை அடித்து கொலை: மகன் கைது*

♈🇮🇳🌴23] *எம்.பி., சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது*
♈🇮🇳🌴24] *இந்திய தூதரக அதிகாரிகளின் படங்களையும் பெயரையும் பாகிஸ்தான் வெளியிட்டதால், அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது*
♈🇮🇳🌴25] *ஐ.நா.,வின் சட்ட குழுவில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்*
♈🇮🇳🌴26] *ஒடிசாவில் ரூ.685 கோடியில் ஆபரண தொழில் பூங்கா*
♈🇮🇳🌴27] *திமுக தலைவர் கலைஞரை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை மு.க.அழகிரி சந்தித்தார்*
♈🇮🇳🌴28] *மதுக்கடையை சூறையாடியதாக 16-வயது சிறுவன் உள்ளிட்ட நால்வர் கைது!கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள பொன்னே கவுண்டன்புதுரைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது-23). இவர் கடந்த தீபாவளியன்று மது போதையில் சென்றதால் ஏற்ப்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 30-ஆம் தேதி உயிரிழந்தார்.தினேஷ்குமார் உயிரிழப்புக்கு பொன்னேகவுண்டன்புதுாரில் உள்ள மதுக்கடைதான் காரணம் எனக்கருதிய அப்பகுதியை சேர்ந்த, 30-க்கும் மேற்பட்டவர்கள் அக்., 31-ஆம் தேதி இரவு மதுக்கடையை அடித்து, உடைத்து சூறையாடினர்*

*பட்டிகளில் ஆடு திருடிய 5 இளைஞர்கள் கைது;இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், தாளகுளம், சாணார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது-47), இவர் நேற்று மாலை தன் வீட்டருகே வெள்ளாடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், வெள்ளாடு ஒன்றை தூக்கிச் செல்ல முயன்றனர்.இதைக்கண்ட சோமசுந்தரம் கூச்சலிட்டு சத்தம் போவவும், அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்து ஆடு திருடியவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், சாலையோரத்தில், அவர்களின் வரவுக்காக காத்திருந்த மற்ற மூன்று பேரையும் துரத்திப் பிடித்து, பவானி போலீசாரிடம் ஒப்படைத்தனர்*

♈🇮🇳🌴 ♈🇮🇳🌴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here