அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 1008 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வரும் 8 ஆம் திகதி அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கிளிண்டனும் போட்டியிட உள்ளனர்.
இதன் காரணமாக இருவரும் அமெரிக்காவில் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
மேலும் இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் தற்போதைய அமெரிக்கா அதிபரான ஒபாமாவும் கிளிண்டனுக்கே தன்னுடைய ஆதரவு என்றும் அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் கிளாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசிதிபெற்ற நல்லூர் கந்தசாமி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெற்று உள்ளது.
இந்த விழாவில் இலங்கைத் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்திலும் 108 மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து பிரார்த்தனை நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக