படகு விபத்தில் 239 அகதிகள் பலி. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

படகு விபத்தில் 239 அகதிகள் பலி.

படகு விபத்தில் 239 அகதிகள் பலி

லிபியக் கடற்பகுதியில் இடம்பெற்ற இரண்டு படகு விபத்துகளில், குறைந்தது 239 அகதிகள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் குடிபெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு நேற்றுத் தெரிவித்தது. இந்த இரண்டு படகுகளும், மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவை நோக்கிச் செல்ல முயன்றவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர் எனக் கருதப்படுகிறது.  

முதலாவது குழுவில், 20 பெண்கள், 6 சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 140 பேர், லிபியாவிலிருந்து புதன்கிழமையன்று புறப்பட்டுள்ளனர். ஆனால், சில மணிநேரத்திலேயே அப்படகு கவிழ, அவர்களுள் 27 பேர் காப்பாற்றப்பட்டனர். காப்பாற்றப்படாத ஏனையோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  

மற்றைய படகில், சுமார் 130 பேர் பயணித்துள்ளனர். கிட்டத்தப்பட்ட அதேநேரத்தில் இடம்பெற்ற அந்த விபத்தில், அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  

இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து, ஐரோப்பாவை நோக்கி கடல்மூலமாகச் செல்ல முயன்று இவ்வாண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 4,220 என உயர்ந்துள்ளது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here