♈🇮🇳🌴1] *டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது ராகுல் காந்தி கட்சி தலைவர் ஆவது மேலும் தள்ளிப்போகும்?*
♈🇮🇳🌴2] *மீன் வளத்தை பாதுகாக்க மடிவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் டெல்லியில் இலங்கை எம்.பி. சுமந்திரன் பேட்டி*
♈🇮🇳🌴3] *உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: சமாஜ்வாடி– காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டம் பேச்சுவார்த்தை தொடங்கியது*
♈🇮🇳🌴4] *தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது*
♈🇮🇳🌴5] *பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ரம்பத்ராபூர் ரயில் நிலையத்தில் ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அந்த 6 பெண்களும் சாத் பூஜா கொண்டாட்டங்கள் முடிந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்*
♈🇮🇳🌴6] *நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாத் பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். சூரியக் கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் இந்து மத விழா இது. நான்கு நாட்களுக்கு இது நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்*
♈🇮🇳🌴7] *இரண்டு நாட்கள் கடும் பனிப்புகை காரணமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நர்சரியில் இருந்து 12ம் வகுப்பு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♈🇮🇳🌴8] *நாகர்கோவில் அருகே வெட்டுர்ணிமடத்தில் கேரள அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்*
♈🇮🇳🌴9] *ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாங்கம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயதடைந்தார்*
♈🇮🇳🌴10] * டில்லி - ஹவுரா, டில்லி - மும்பை இடையே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் கதிமான் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது*
♈🇮🇳🌴11] *இங்கிலாந்தின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குவதாக அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴12] *இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியா வருகை; மோடியுடன் இன்று சந்திப்பு*
♈🇮🇳🌴13] *அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR)வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் இருபது (20) இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இவர்களில் சுயவிருப்பின்பேரில் ஓர் குழுவினராக 20 பேர் (10 குடும்பங்கள்) சென்னையிலிருந்து இலங்கை விமானசேவை நிறுவனத்தின் (UL 122) இனூடாக மு.ப. 11.10 மணியளவில் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதியன்று இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிலிருந்து கட்டம் கட்டமாக சுயவிருப்பில் இலங்கைக்கு அகதிகளை அழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் அதிகரித்த அகதிகளின் வருகையானது நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையாக காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி அவர்கள் தெரிவித்தார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக