http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
-வர்தா புயல் பாதிப்பை சரி செய்ய போதிய நிதி இல்லாமல் சென்னை மாநகராட்சி திணறுகிறது. தேவையான நிதியில் 50% ஆவது தாருங்கள் என வருவாய்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு முதல்கட்டமாக ஒதுக்கியுள்ள ரூ.75 கோடி போதாது என மாநகராட்சி அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்களை சீரமைக்கும் பனி நிதி இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. உரிய நிதி கிடைத்தால் மட்டுமே சீரமைப்பு பணிகளை முடுக்கி விட முடியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்*
*விமானப்படை அதிகாரிகள் தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதரீதியான காரணங்கள் கூறி தாடி வளர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
♈🇮🇳🌴1] *ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சம் புதிய 2000 ஆயிரம் நோட்டுகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
♈🇮🇳🌴2] *ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மந்த கதியில் நடைபெறுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்*
♈🇮🇳🌴3] *சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பின் நடிகர் விவேக் பேட்டி அளித்துள்ளார். புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை அதிகளவில் நடவேண்டும் என நடிகர் விவேக் கூறியுள்ளார்*
♈🇮🇳🌴4] *மதுரை விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு ஏற்றுமதி- இறக்குமதி முனையம் திறக்கப்பட்டது. சர்வதேச சரக்கு முனையத்தால் தென் தமிழகம் வளர்ச்சி அடையும் என மதுரை விமானநிலைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார்*
♈🇮🇳🌴5] *குரோம்பேட்டையில் 4 நாளாக தொடர்ந்து நிலவும் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் கோரி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளதால் கடும் சிரமம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்*
♈🇮🇳🌴6] *அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய அதிமுகவின் விதிகள் தளர்த்தப்படும் என அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவித்தார். அதிமுகவின் அச்சாணியாய் சசிகலா செயல்படுவார் பொன்னையன் மெரினா கடற்கரையில் பேட்டியில் கூறினார்*
♈🇮🇳🌴7] *புயலால் பதித்த சென்னையில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை என்றும் மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 500 கோடி போதுமானதாக இருக்காது என்றும் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க ரூ. 500 கோடியை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஜெ.மரணத்தை அரசியலாக்க திமுக விரும்பவில்லை என ஸ்டாலின் கூறினார்*
♈🇮🇳🌴8] *நொய்டாவில் ஆக்சிஸ் வங்கியில் போலியாக 20 கம்பெனிகளின் வங்கிக்கணக்கில் ரூ.60 கோடி பணம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்த விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் வங்கி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
♈🇮🇳🌴9] *புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மீனவர் பிரச்சனை, ஜல்லிக்கட்டு குறித்தும் மோடியிடம் வைகோ பேசினார்*
♈🇮🇳🌴10] *மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சனையை காங்கிரஸ் பேச பாஜக எதிர்ப்புதெரிவித்ததால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டுள்ளது*
♈🇮🇳🌴11] *காஞ்சிபுரம்: படப்பை அருகே சிறுமாற்றுநல்லூர் ஏரியில் 38 மாடுகள் இறப்பு*
♈🇮🇳🌴12] *சீர்காழி அருகே அரசு பள்ளி மேற்கூரை பூச்சு விழுந்து 5ம் வகுப்பு மாணவன் காயம்*
♈🇮🇳🌴13] *சென்னை எழும்பூரில் புயல் பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு*
♈🇮🇳🌴14] *கோவை: வன உயிரின மோதல் கலந்தாய்வு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்*
♈🇮🇳🌴15] *கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் யானை பிரச்னை தலைதூக்கியுள்ளது. வனப்பகுதியில் இருந்து வந்துள்ள, 60 யானைகளால், கிராம மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் போது, உணவு தேடி யானைகள் கிராமப்பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் யானை பிரச்னை ஏற்பட்டுள்ளது. 60 யானைகள் நடமாட்டம் இருப்பதால், குக்கன்பள்ளி, பாத்துக்கோட்டை அழிபாளம் கிராம மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் விவசாய நிலங்களை யானைகள் நாசம் செய்து வருவதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்*
♈🇮🇳🌴16] *யோகாகுரு ராம்தேவ் நடத்தி வரும் பஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக பஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதால் அந்நிறுவனத்தின் வருமானமும் 2 மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரூ.5000 கோடி வரை வருமானம் ஈட்டி வரும் இந்நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 வரை வருமானம் பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சில பொருட்களை பஞ்சலி நிறுவனம், தங்களின் லேபிளை பயன்படுத்தி தவறாக விளம்பரப்படுத்தி வருவதாக 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த ஹரித்வார் கோர்ட், பஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை இந்த மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடருவதற்கு முன் 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதஞ்சலி நிறுவனத்தின் தேன், உப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்ததில், இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக