http/www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
💥டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று 53 ரயில்கள் தாமதமாக வருகின்றன. 23 ரயில்களின் நேரம் மாற்றம்; 13 ரயில்கள் ரத்து
💥ஆண்டு வருமானம் தொடர்பாக தவறான தகவல் தெரிவிப்போர் மீது சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) எச்சரித்துள்ளது.
💥பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தபால் நிலையங்களில் கடந்த 7-ஆம் தேதி வரை ரூ.3,680 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் மாற்றப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
💥உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார்.
2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
💥இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை வரைமுறைப்படுத்துவதற்கான பணிக் குழு இன்னும் ஒரு வாரத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
💥முந்தைய ஆட்சிகளில் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல்: ராஜ்நாத் சிங்
💥மருத்துவத்தில் டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. போன்ற சிறப்பு பட்ட மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி), அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
💥இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை எனில், நாட்டில் அமைதியின்மையும், மனவிரக்தியும் ஏற்படலாம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
💥நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மசோதா ஒருமனதாக புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
💥தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியல் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சி. பட்டியலில் உள்ள சில ஜாதிகளை எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் விதமாகவும், மேலும் சில குறிப்பிட்ட ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் இணைக்கும் வகையிலும் இந்த மசோதாவின் ஷரத்துகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றன.
💥சென்னை, கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் தற்போதைக்கு மாற்றப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
💥இந்திய சுற்றுலாத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களது வருகை, அரசுக்கு வருடாவருடம் அதிக லாபத்தை ஈட்டித்தருகிறது. இதனை அதிகரிக்க இணைய சேவை மூலமாக சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு 2014ல் சட்டம் நிறைவேற்றியது. தற்போது இந்த ஈ - விசா சேவை 161 நாட்டு சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
💥அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிக்க, சசிகலா அவசரம் காட்ட வேண்டியதில்லை; அதை மக்களும் விரும்பவில்லை,'' என அ.தி.மு.க., பேச்சாளரும், நடிகருமான ஆனந்தராஜ் தெரிவித்தார்
💥அரசு அலுவலகங்கள், விழா அழைப்பிதழ்களில் குறிப்பிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் வெளியாகாததால், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது
💥கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 100 மீனவ யாத்ரீகர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அவர்கள் பங்கேற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
💥சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: சவுமியா அன்புமணி
💥தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
💥முன்பு ஆண்கள், பெண்களை கவர்ந்து ஓடுவர். தற்போது காலம் மாறிவிட்டது. பெண்களே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்கின்றனர். தற்போது புகை பிடிக்கும், மது பழக்கம் உள்ள பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. கலியுகத்தில் நடப்பதுபோல், இது அமைந்துள்ளது,' என முன்ஜாமின் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
💥சபரிமலையில் இல்லாத ஆச்சாரங்களை உருவாக்கி, அதை பின்தொடர வேண்டாம், என, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
💥உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா. இக்கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
💥ஐசிசி டெஸ்ட் போட்டி தரவரிசையில் அஸ்வின் பந்துவீச்சு பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக