மதிய செய்திகள் 19/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 19/12/2016

📡💥மதிய செய்திகள் 💥📡

             📡💥19\12\16💥📡


💥💥💥💥💥💥💥💥💥💥💥

📡📡📡📡📡📡📡📡📡📡📡

📡💥📡💥📡💥📡💥📡💥📡

💥அடிபட்டவர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நர்ஸ் படுகாயம்
நாகர்கோவில்: விபத்தில் அடிபட்டவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் நர்ஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.



📡திருமணத்திற்கு மறுத்த சிறுமி... எரித்துக்கொன்ற பெற்றோர், அண்ணன் கைது- நாமக்கல்லில் அதிர்ச்சி
நாமக்கல்: கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்பதாகும். நாமக்கல் மாவட்ட வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள்தான் ஐஸ்வர்யா. தங்கராஜ் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கும் அவருடைய உறவினர் சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா, இந்த சம்பவம் குறித்து நாமக்கலில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஐஸ்வர்யா தகவல் அளித்தார். இதனையடுத்து அந்த மைய அதிகாரிகள் ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
கடந்த புதங்கிழமை காப்பகத்திற்கு சென்ற ஐஸ்வர்யாவின் உறவினர்கள் , அவருடைய தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர்.
ஆனால் ஐஸ்வர்யா கடந்த சனிக்கிழமை இரவு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை அவர்களது பெற்றோர்கள் சுடுகட்டில் எரித்து விட்டனர்.
இந்த மரணத்தில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் , திருமணத்திற்கு மறுத்தால் அவர் பெற்றோரே எரித்து கொன்றனரா என்று போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
குழந்தை திருமணத்திற்கு மறுத்த சிறுமியை எரித்து கொலை செய்த பெற்றோரையும், அண்ணனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



📡உத்திரகாண்ட் - மிதமான நிலநடுக்கம்
உத்திரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.4ஆக பதிவாகி உள்ளது.



📡வர்தா தாக்கி ஒருவாரமாகியும் வராத மின்சாரம்- சென்னை, புறநகரில் மக்கள் தவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே உள்ள படப்பை, கரசங்கால் உள்ளிட்ட பல கிராமங்களில் 7 நாட்களாக மின்விநியோகம் சீரடையாததால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு, இரவில் படுக்க முடியாத சூழல், கொசு தொல்லை என சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


💥செல்ஃபோன் டவர்களின் கதிர்வீச்சை அளக்க புதிய இணையதளம்..!
செல்ஃபோன் டவர்களில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சை அளக்க, புதிய இணையதளம் ஒன்றை வெளியிட உள்ளதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. 'தராங் சன்சார்' (Tarang Sanchar) என்று இந்த இணையதளத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட செல்ஃபோன் டவரின் கதிர்வீச்சை இலவசமாக தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு தனியாக 5,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் மட்டுமே கதிர்வீச்சை அளந்து தெரிவிக்கப்படுமாம்.




📡பதன்கோட் தாக்குதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! பாக். தீவிரவாத அமைப்பு மீது குற்றச்சாட்டு
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என இந்திய தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


💥முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை பாராட்டும் மு.க.ஸ்டாலின்
திமுக மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான க.அன்பழகனின் பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திப்பதை வரவேற்கிறேன்.



📡குஜராத்தில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து பசுமாட்டை அடித்துக் கொன்ற சிங்கம்
குஜராத்: குஜராத் மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் பசுமாடு ஒன்றை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டப்பகலில் அம்ரேலி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிங்கம் விற்பூர் கிராமத்திற்குள் புகுந்து பசுமாடு ஒன்றினை அடித்துக் கொன்றுள்ளது. பொதுமக்கள் சூழ்ந்ததை கண்டு கொள்ளாமல் பசு இறைச்சியை பொதுமான அளவுக்கு உண்டபின்னர் சவகாசமாக நடந்து காட்டுக்குள் சென்றுவிட்டது. அதே சிங்கம் விட்டுச் சென்ற மாமிசத்தை தேடி மீண்டும் வந்த போது வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.




💥மருத்துவமனையில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் இன்று டிஸ்சார்ஜ்
டெல்லி: சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிசம்பர் 10ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. உடல்நலம் தேறிவந்த அவர் இன்று மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு செல்லவுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன





📡வர்தா புயல் உயிர்சேதம் இதனால்தான் தவிர்க்கப்பட்டது : சொல்கிறார் அமைச்சர்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்தா புயலுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும், 28 ஆயிரம் ஹெக்டேர் அளவு பயிர் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 70 ஆயிரம் குடிசைகள் முழுவதுமாகவும், பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளதாகவும், 529 மாடுகள், 291 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் புயலால் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.
புயல் முன்னெச்சரிக்கையாக 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் கூறிய அமைச்சர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்றும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.




💥சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவி ஜெயலலிதா!- வாஷிங்டன் கூட்டத்தில் புகழஞ்சலி
வாஷிங்டன்: சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவியாகத் திகழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என வாஷிங்டன் தமிழ்ச் சங்க இரங்கல் கூட்டத்தில் புகழஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் வாஷிங்டன் மாநகர தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



📡தேசிய கீதம் இசைத்தபோது போனில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.
ஹவுரா: தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட பெண் எம்.எல்.ஏ. வைஷாலி டால்மியா மொபைல் போனில் பேசியபடியே இருந்த காட்சி சமூக கூடகங்களில் வெளியாகி கண்டன குரல்களை எழுப்பியுள்ளது.



💥ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு வங்கி கணக்கில், ஒரு முறை அதுவும் அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் அதுவும் இந்த நடைமுறை டிச.30 வரை மட்டுமே என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.




📡சத்தீஸ்கரில் 6 நக்சலைட்டுகள் கைது
பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




📡டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை : துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.



💥ரஷ்ய ராணுவ விமானம் விபத்து : 27 பேர் பலி
சைபீரியா : 40 பேருடன் சென்ற ரஷ்ய பாதுகாப்பு படை விமானம், விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 27 பேர் பலியானதாக கூறப்படுகிறது.ரஷ்ய பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம், சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 பேர் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.


📡வேலைக்குப் போகும் பெண்களில் செல்விகளை விட திருமதிகளே அதிகமாம்: பட்டிமன்றம் அல்ல ஆய்வில் தகவல்
புது தில்லி: இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வேலைக்குப் போகும் பெண்களில் திருமணமாகாதப் பெண்களை விட, திருமணமான பெண்களே அதிகம் என்று தெரிய வந்துள்ளது.



💥2008ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் விஷ்ணு கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு இரட்டை ஆயுள் சிறை.


📡தயாநிதி, கலாநிதி மாறன் ஜாமீன் மனு மீதான விசாரணை டிச.22-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..



💥திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 95வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்தார்.


📡பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்த புதிய விதிமுறை
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1. ஒரு முறை மற்றுமே வங்கியில் செலுத்தலாம் .
2. ரூபாய் 5000க்கு மேல் டெபாசிட் ஒரு முறை தான் செலுத்த முடியும் .
3. 5000க்கு மேல் டெபாசிட் செய்ய புதிய விதிமுறைகளை பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும்.
4. கருப்பு பண திட்டத்தில் டெபாசிட் செய்ய இந்த விதிமுறை பொருந்தாது .



💥திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே வ‌லாங்குள‌ம் ப‌குதியில் காப்பி தோட்ட‌த்திற்குள் முகாமிட்டிருந்த‌ காட்டெருமை தாக்கிய‌தில் ஜெய‌பிர‌காஷ் என்ப‌வ‌ர் உயிரிழ‌ப்பு.



📡28,000 ஹெக்டேர் பயிர்கள் சேதம்
சென்னை: 'வர்தா' புயல் வீசியதால், மூன்று மாவட்டங்களில், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னை, எழிலகத்தில் இன்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: 'வர்தா' புயல் வீசிய போது, மூன்று மாவட்டங்களில், 24 பேர் உயிர் இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில், 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டன. புயலினால், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 5,500 ஹெக்டேர் தோட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 529 மாடுகள், 299 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. 70 ஆயிரம் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன.



💥திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து சவாலான அரசியலில் மீண்டும் ஈடுபட வேண்டும் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.



📡ஆட்டோ ஓட்டுநர் குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று பெயர் சூட்டிய சசிகலா
சென்னை: ஆட்டோ ஓட்டுநர் குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று அவரது தோழி சசிகலா பெயர் சூட்டினார். இதை கண்ட அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.



📡ரயில் பெட்டிகள் வடிவமைப்பு குறித்த சூப்பர் ஐடியாவுக்கு காத்திருக்கு ரூ.12 லட்சம் ரொக்க பரிசு
புதுடெல்லி: ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, நிலையங்களில் புதிய டிஜிட்டல் செயல்களை மேம்படுத்துவது தொடர்பாக சிறந்த ஆலோசனைகளை வழங்கும்படி பொதுமக்களிடம் ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சிறந்த ஐடியாவுக்கு ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளது.





💥இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் தோவால் பாராட்டு தெரிவித்துள்ள ார். மேலும், கோப்பையை வென்ற வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசுத் தொகையையும் அவர் அறிவித்துள்ளார்



📡பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசம் வருகை
லக்னோ: அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேச மாநிலம் லக்னோ வந்தடைந்தார். அவரை ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.


💥சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கோரிக்கை மனு அளிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.



📡நாட்களில் சம்பளம் வாங்க மறுக்கும் எம்.பி
டெல்லி: ஒடிஷாவை சேர்ந்த பையந்த் ஜே பாண்டா என்பவர் நாடாளுமன்றம் முடங்கினால் சம்பளம் வாங்குவது தவித்துக்கொள்வர். ஊழல் மிக்க எம்.பி.க்கள் நடுவே, சம்பளத்தையே வாங்க மறுக்கும் ஒரு எம்.பி.யின் செயல் புல்லரிக்க வைத்துள்ளது. பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், கடந்த 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு வந்து போய் இருக்கிறார். எப்போதெல்லாம் நாடாளுமன்றம் முடங்குகிறதோ அந்த நாட்களுக்கு சம்பளமே வாங்கமாட்டார்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தவர். என்ஜீனியரிங் படிப்புடன் மேலாண்மை கல்வியும் படித்தவர். எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் மக்களுக்காக உழைப்பது மட்டும்தான் இவரது பணியே.
மக்கள் நினைத்தால் இரவு பகல் என எந்த நேரத்திலும் பையந்த் ஜே பாண்டா வீட்டு கதவைத் தட்டலாம். அந்தளவுக்கு எளிமையான மக்கள் அணுகக் கூடிய மனிதராக இருந்திருக்கிறார். இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் முடிவடைந்தது. குளிர்காலக் கூட்டத் தொடரின் பெரும்பகுதி நாட்களில் நாடாளுமன்றம் நடைபெறவில்லை. மக்களின் வரிப்பணத்தில் ஒரு நாள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு பல கோடி செலவாகிறது.

மக்கள் வரிப்பணம் வீணாவது பொறுக்காத பையந்த் ஜே பாண்டா அந்த நாட்களுக்கான சம்பளத்தை அரசுக்கே திருப்பி செலுத்தி விடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், மக்களின் வரிப்பணத்தில் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. அதன் மதிப்பை நான் அறிந்திருக்கிறேன் என்றும் நாடாளுமன்றம் முடங்கும் சமயத்தில், எனது சம்பளத்தின் ஒரு பகுதியை அரசுக்கே திருப்பி அளித்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் மக்களின் பணம் வீணாவதற்கு முன் நான் சம்பளத்தை திருப்பி தருவது எல்லாம் ஒரு விஷயமே அல்ல. எம்.பிக்களாக இருந்து கொண்டு எவ்வளவோ சலுகைகளை பெறுகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டிய பணியை முறையாக செய்வதில்லை. என் மனசாட்சி சொல்கிறபடி நான் நடக்கிறேன்'' என்றார்.



💥அமலாக்க துறை அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



📡அகமதாபாத்தில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து
அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் மக்கள் சிக்கல் இருக்க வணிக வளாகத்தில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது.



💥கேரளாவில் 22 வயதுடைய பெண் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் கற்பழித்த 5 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


📡ஜெ. மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு
ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சசிகலா புஷ்பா எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.




💥கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 42வது ஆண்டு கேக் நிகழ்ச்சியில் உலகின் முக்கிய இடங்களான லண்டன் பாலம் மற்றும் சீன டிராகன் கேக் உருவாக்கப்பட்டுள்ளது. 500 கிலோ எடைகொண்ட லண்டன் பாலம் கேக்கும் மற்றும் 7.5 அடி நீளமுள்ள சீன டிராகன் கேக்கும் உருவாக்கியுள்ளனர்.


📡நன்கொடை பெற அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு
அனுப்பியவரின் பெயர் கூறாமல், வருகிற நிதி நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெறுவதற்கு அரசியல் சாசனமோ, பிற சட்டங்களோ எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.
ஆனால், 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 29 சி, இப்படி வருகிற ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகள் குறித்து சுய பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே கூறி உள்ளது.
இந்தநிலையில் அரசியல் கட்சிகள் பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதியாக நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

📡💥📡💥📡💥📡💥📡💥📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here