இ.பி.எப் (EPF) என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற இபிஎப் வாரிய உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 8.8 சதவீதமாக இருந்தது. அது தற்போது 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு வைத்துள்ள 15 கோடி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதம் மிகவும் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக