இன்றைய முக்கிய செய்திகள் 23/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய முக்கிய செய்திகள் 23/12/2016

*🔴🔵இன்றைய முக்கிய செய்திகள்@23/12/16🔵🔴*

🔴பல்வேறு மட்டத்தில் நாடு பின்தங்கி இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் தான். ஏனெனில் 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்தது அவர்கள்தான் - நரேந்திர மோடி 

🔴பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானும், எதிர்க்கட்சிகளும் ஒன்று: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடி குற்றச்சாட்டு

🔴பயங்கரவாதிகளுக்கு உதவும் பாகிஸ்தான் அரசைப் போல, கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் உதவி வருகின்றன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

🔴'நிதி ஆயோக்' துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா, பணமதிப்புக் குறைப்பு மட்டுமின்றி ஊழலுக்கெதிராக மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

🔴ஜெய்ப்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் கூடுதல் எஸ்.பி. ஆஷிஷ் பிரபாகரின் காரில் நேற்று இரவு ஒரு பெண்ணின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

🔴சேலம் செக்கானூர் கதவணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மதகு உடைப்பு சரி செய்யப்பட்டது

🔴நஜிப் ஜங்கின் ராஜினாமா வியப்பை அளிக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

🔴கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் ரூ.29.98 லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

🔴இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்

🔴தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை பார்வையிட 8 பேர் கொண்ட மத்திய குழு, இன்று சென்னை வருகை தரும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

🔴மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணிபுரிந்த பெண்ணின் தந்தை பாதுகாப்புக்கோரி தாக்கல் செய்த வழக்கில், 'மிரட்டியதாக கூறப்படும் நபரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

🔴உதகமண்டலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

🔴ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

🔴சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் தினமும் 5 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

🔴இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

🔴தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அதிமுக அரசின் சர்வாதிகார, ஊழல் மற்றும் முறைகேடான போக்குக்கு மரண அடியாக அமைந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

🔴நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதிகப்படியான குப்பைகளை எரித்தால் ஒரு முறைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

🔴நார்வே நாட்டில் பொய்ப் புகாரின் அடிப்படையில் இந்திய தம்பதியிடம் இருந்து ஐந்து வயது குழந்தையை அதிகாரிகள் தூக்கிச் சென்று, காவலில் வைத்துள்ளது தொடர்பாக அந்நாட்டுக்கான இந்தியத் தூதரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கோரியுள்ளார்.

🔴மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு, கூடுதலாக, 37 ஆயிரம் வீரர்களை, மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

🔴டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

🔴தனியார் மற்றும் அரசு உட்பட அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குமான நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

🔴ரயில்வேயிடம் தற்போது 8859.18 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதிக உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ், இந்த காலியிடங்களில் விவசாயம் செய்ய ரயில்வேயின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே விதிகள் படி, ரயில்வே நிலங்களின் உரிமம் தனியார் நபர்களுக்கு அளிக்கப்படுவதில்லை - ரயில்வே அமைச்சக அதிகாரி

🔴மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் "மோடியை விரட்டுவோம் - தேசத்தைப் பாதுகாப்போம்' என்ற கோஷத்துடன் திரிணமூல் காங்கிரஸ் ஒரு வார காலத்துக்கு போராட்டம் நடத்தும் என்று அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

🔴ராகுல் காந்தி கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டுமென்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

🔴நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலை ஒரேநேரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக ரூ.1009 கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

🔴பிரதமர் நரேந்திர மோடியை மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசியுள்ள நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔴பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத 255 அரசியல் கட்சிகளின் நிதி நிலவரம் குறித்து ஆராயுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தை (சிபிடிடி), தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

🔴பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கால், கடந்த 7 மாதங்களில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். 

🔴2017ம் ஆண்டுக்கான மத்திய அரசின் காலண்டரை, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ராஜ்யவர்தன் ரத்தோர், டெல்லியில் நேற்று வெளியிட்டனர்.

🔴புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் 3 சர்வதேச விமானங்கள் தாமதமாக வரவுள்ளது, மேலும் 1 உள்நாட்டு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

🔴2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பசுமை வனமாக இருந்ததுதான் சஹாரா பாலைவனம்.94 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்த பாலைவனம்.37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மணலில் பனித்துளிகள் போர்வையிட்டது போல காட்சியளித்துக்கொண்டிருக்கிறது சஹாரா.

🔴ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2ஆக பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here