மாலை செய்திகள் 28/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 28/12/2016

'*ஆந்திராவில் அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டையுடன் கூடிய பணப்பரிவத்தனை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர்   சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்*
            ♈🇮🇳🌴1] *பறவைகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் எச்சரிக்கை ஒலிகளை கேட்பதற்கு வாகன போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சல் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பறவைகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் எச்சரிக்கை ஒலிகளை கேட்பதற்கு வாகன போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சல் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பரபரப்பான சாலையில் இருந்த இரண்டு வெவ்வேறு பறவை இனங்களை கொண்டு, அவற்றால் அருகாமையில் உள்ள ஆபத்துக்களை உணர்த்தும் எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடிகிறதா என்று இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.ஒலிபெருக்கிகளில் இருந்து கேட்கப்பட்ட வாகன போக்குவரத்து இரைச்சலால் அருகே இருந்த உணவு மேடையில் உணவுள்ளதா என்பதை இப்பறவைகள் கவனிப்பதை தடுக்க முடியவில்லை என்று தெரிவித்த இந்த ஆய்வு, அதே வேளையில் இந்த வாகன போக்குவரத்து ஒலி, இப்பறவைகளை எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடியாமல் மறைத்து விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது*
♈🇮🇳🌴2] *உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான 325 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. 325 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் முலாயம் சிங் வெளியிட்டார். எஞ்சியுள்ள 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴*புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் மது, உணவு விற்பனை செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது*
♈🇮🇳🌴3] *ராமமோகனராவின் நெருங்கிய நண்பர் அமலநாதன் வருமானவரித்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் அமலநாதன் ஆஜராகினார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♈🇮🇳🌴4] *சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையில் அதிமுகவினர் கைகலப்பு ஏற்பட்டது. கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் புஷ்பாவின் கணவரை கொடூரமாக தாக்கியதில் அவரது மூக்கு உடைந்தது*

♈🇮🇳🌴5] *ஐதராபாத்: கடப்பா மாவட்டத்தில் சந்தன மற்றும் செம்மரங்கள் கடத்தல் குற்றவாளி அசாப் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அசாப் கானிடம் இருந்து 150 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 டன் சந்தன மற்றும் செம்மரங்களை கடத்தியதாக அசாப் கான் கைது செய்யப்பட்டுள்ளார்*

♈🇮🇳🌴6] *சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது: முலாயம் சிங் *

♈🇮🇳🌴7] *காவிரி:டிச.,30ல் பிரதமரை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா*

♈🇮🇳🌴8] *விழுப்புரம்: கரடிப்பாக்கத்தில் மணல் லாரிகள் சிறைபிடிப்பு*

♈🇮🇳🌴9] *சாத்தூர் வெடி விபத்து: பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here