மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை உட்பட அபராதம் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டப் பிரகடனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நோட்டுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை வங்கியில் டிபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் காலக்கெடு தொடர்பான அவசரச்சட்டம் இயற்றும் பிரகடனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 31-க்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றிலும் 10 தாள்களுக்கு மேல் வைத்திருப்பது குற்றமாக கருதப்படும். இதன் படி அபராதம் சில சந்தர்ப்பங்களில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வரை அளிக்கப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக