*☦🅾ஏழைப் பங்காளன் "மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்" - எம்.ஜி.ஆர். நினைவு தினம்*🔴🔵⚪⚫
இன்றைக்கும் தமிழகத்தின் எந்த கடைக்கோடி கிராமத்துக்கு சென்றாலும், சைக்கிள் ரிக்ஷா, தட்டு வண்டி, ஆட்டோ, தண்ணீர் பந்தல், டீக்கடை என ஏதோ ஓரிடத்தில் இவரது சிறிய படைத்தையேனும் காணலாம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அடித்தட்டு ஏழை மக்களிடத்தில் இறவா புகழ் பெற்றவர் இவர். இப்போதைய ஊடகங்கலெல்லாம் அப்போதில்லாத காலமது. இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக் கூடாது என்ற கூற்றுக்குச் சொந்தக்காரரிவர்.
ராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் கடந்த ஜனவரி 17ம் தேதி 1917ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார்.
இவருடன் சக்கரபாணி என்ற அண்ணனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது.
அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
எம்.ஜி.ஆர் ராஜா - ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். சிங்கங்களை தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.
1971ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத" விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான "ரிக் ஷாக்காரன்" படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம். அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட 60 ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர்.
தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981ம் ஆண்டில் அன்று முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் (எம்.ஜி.இராமச்சந்திரன்) தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
உடல்நலக் குறைபாடுகாரணமாக 24.12.1987 அன்று மரணமடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக