மதிய செய்திகள் 24/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 24/12/2016

♈🇮🇳🌴*அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் குப்பெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சவிதா வைத்தியநாதன் என்ற பெண் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றார்.இந்த நிலையில், அதே கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ தெற்கு நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதீப் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுள்ளார்.இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் புர்து பல்கலைக்கழகத்தில் முதுநிலை என்ஜினீயரிங் பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றவர்*
♈🇮🇳🌴*அமெரிக்காவில் பரபரப்பு டிரம்ப் மகளுடன் மோதியவர், விமானத்தில் இருந்து வெளியேற்றம்*

♈🇮🇳🌴*ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தில் ரூ.8 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- அதிக மதிப்புடைய பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்த நடவடிக்கை மூலம் கருப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநிறுவன முதலாளிகளின் நலனுக்காகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்களின் வங்கிக் கடன்கள் ரூ.1.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.இப்போது, பெரு நிறுவனங்களின் வங்கிக் கடன்கள் ரூ.8 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டை கடந்த ஒரு மாதமாக கூறி வருகிறேன். ஆனால், என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் உண்மை கூறுவதே இதற்கு காரணமாகும்” என்றார்.ரூ.8 லட்சம் கோடியில் மெகா ஊழலை செயல்படுத்தவே ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்*

♈🇮🇳🌴*தொழிலதிபர் நஸ்லி வாடியா(72), பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் தாய்வழிப் பேரன் ஆவார். டாடா கெமிக்கல்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய குழுமங்களின் இயக்குனராகவும் இருந்து வந்தார்.இதனிடையே, நஸ்லி வாடியா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சுயாதீன இயக்குனர் பதவி மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்திலிருந்தும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டார்.முன்னதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அவசர பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நஸ்லி வாடியாவை சுயாதீன இயக்குனர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், வாடியாவை பதவி நீக்கம் செய்யும் முடிவிற்கு 70 சதவீதம் பங்குதாரர்கள் வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் நஸ்லி வாடியா, இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக டாடா மோட்டார்ஸ் அறிக்கை மூலம் தெரிவித்தது.டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்திலிருந்து வாடியாவை நீக்குவதற்கு 90.8 சதவீதம் பங்குதாரர்கள் ஆதரவு தெரிவித்ததால் நேற்று முன்தினம் அவர் வாரியத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.இந்நிலையில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்தும் நஸ்லி வாடியா இன்று நீக்கப்பட்டுள்ளார்.அவரை பதவிநீக்கம் செய்யும் முடிவை ஆதரித்து டாடா கெமிக்கல்ஸ் பங்குதாரர்களில் 75.67 சதவீதம் பேர் வாக்களித்ததாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

♈🇮🇳🌴*சீனா- பாகிஸ்தான் இடையேயான பொருளாதாரப்பாதைக்கு இந்தியா எதிர்ப்பு*

♈🇮🇳🌴*பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்*
♈🇮🇳🌴*இவர் வாழ்வாரா ,வாழவிடுவார்களா ??????ஊழலில் யார்-யாருக்கு தொடர்பு என்று விசாரணை முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் ரகசிய டைரி சிக்கியது*

♈🇮🇳🌴*இரை கிடைக்காமல் காட்டைவிட்டு வெளியே வந்த 11 அடி நீள இராஜநாகம் மீட்பு.கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள புதுப்பதி பகுதியில் ஓடை ஓன்று உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் 11 அடி நீளமுள்ள இராஜநாகம் தென்பட்டது.இத் தகவலறிந்த வானவர் சசிக்குமார், காவலர்கள் திலகர், மோகன் மற்றும் பாம்பு பிடிக்கும் ஊழியரான அமீன் ஆகியோர் விரைந்து சென்று குடியிருப்பு பகுதிக்குள் இருந்த இராஜநாகத்தை பத்திரமாக மீட்டு வெட்டுமடுவு வனப்பகுதியில் விடுவித்தனர்*

♈🇮🇳🌴*தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல்: கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்*
♈🇮🇳🌴1] *விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்த இரு கடத்தல்கார்ர்கள் தற்போது விலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னர், விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.கடத்தல்காரர்கள் மால்டாவில் தஞ்சக்கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்பட்டதுலிபியாவின் உள்நாட்டு சேவையான அந்த விமானம் கடத்தப்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்தனர்.லிபியாவின் உள்நாட்டு சேவையான அந்த விமானம் கடத்தப்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் விமான உழியர்களும் இருந்தனர். 118 பேர் இருந்ததாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏர்பஸ் ஏ 320 விமானம், ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. உள்நாட்டில் பறந்து கொண்டிருந்தபோது, அது கடத்தப்பட்டது*
♈🇮🇳🌴2] *சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 2014 ஆம் ஆண்டு சூச்சி குளிர்கால போட்டியில் போட்டியிட்ட 28 ரஷ்ய வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ளது*
♈🇮🇳🌴*ஐரோப்பாவை அடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் மூழ்கிய குடியேறிகளின் மொத்த எண்ணிக்கையானது இந்தாண்டு 5 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது*
♈🇮🇳🌴3] *நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், நாகமுத்து அறிவுரை வழங்கினார்*

♈🇮🇳🌴4] *காங்கேயம் அருகே நால்ரோட்டில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*

♈🇮🇳🌴5] *புதுச்சேரியில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி முதல்வர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார். பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்*
♈🇮🇳🌴6] *இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் தங்கச்சிமிடத்தில் மீனவர்கள் 100 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்*

♈🇮🇳🌴7] *மகாராஜபுரம் பகுதியில் விவசாயி கணேசன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நீரின்றி பயிர் கருகியதை கண்டு மனமுடைந்த கணேசன் மாரைடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்*
♈🇮🇳🌴8] *தமிழக முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. முன்னதாக வருமானவரித்துறை சோதனை நடந்தது குறித்து இன்று ராம மோகன ராவிடம் விசாரணை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது*
♈🇮🇳🌴9] *மகாராஜபுரம் பகுதியில் விவசாயி கணேசன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நீரின்றி பயிர் கருகியதை கண்டு மனமுடைந்த கணேசன் மாரைடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்*

♈🇮🇳🌴10] *வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று முதல் அதிகரித்து வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது*
♈🇮🇳🌴11]  *மணிப்பூர் பாதுகாப்பு நிலைமை: ராணுவ தளபதிஆய்வு*
♈🇮🇳🌴12] *வேலூர்: சோளிங்கரில் தனியார் பஸ் - அரசு மோதல் மோதல்: 30 பேர் காயம்*

♈🇮🇳🌴13] *மகாராஷ்டிராவில் மெட்ரோ திட்டம், சிவாஜி சிலைக்கு இன்று மோடி அடிக்கல்*
♈🇮🇳🌴14] *தர்மசாலாவில் இன்று ராகுல் பிரசாரம்*
♈🇮🇳🌴15] *ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி, நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்தில், மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴16] *எச்.ஐ.வி., நீரிழிவு உள்பட 55 நோய்களுக்கு சாப்பிடும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருந்துகள் விலை கட்டுப்பாட்டு திருத்த ஆணைப்படி, 55 அத்தியாவசிய மருந்துகளின் விலைக்கு மத்திய அரசின் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால், அந்த மருந்துகளின் விலை, 5 சதவீதத்தில் இருந்து 44 சதவீதம்வரை குறைந்துள்ளது. எச்.ஐ.வி. தொற்று, நீரிழிவு, உடல் நடுக்கம், பாக்டீரியா தொற்று, தொண்டை அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளும் இவற்றில் அடங்கும். இதுதவிர, மேலும் 29 மருந்துகளின் சில்லரை விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
விலை கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படாத மருந்துகளை பொறுத்தவரை, அவற்றின் விலையை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கு மிகாமல் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴17] *வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக மத்திய அரசின் குழு அடுத்த வாரம் தமிழகத்துக்கு வருகிறது*
♈🇮🇳🌴*குவிக்கப்பட்ட மரங்களால் தீ விபத்துக்கள் ஆபத்து: உடனடியாக அகற்ற வேண்டும்! ராமதாஸ் எச்சரிக்கை*
♈🇮🇳🌴*பெரியாரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை*

♈🇮🇳🌴*அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் (வயது 35). முன்னாள் மாடல் அழகி. இவர் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஹவாய் தீவுக்கு குடும்பத்துடன் செல்ல முடிவு எடுத்தார்.அங்கு செல்லும் வழியில், நியூயார்க் நகரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகரத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஜெட் புளூ ஏர்வேஸ் கார்ப்பரேஷனின் விமானத்தில் ஏறி, குடும்பத்துடன் அமர்ந்தார். விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.அப்போது அந்த விமானத்தில் ஏறிய ஒரு பயணி, விமானத்தில் இவான்கா டிரம்ப் ஏறி அமர்ந்திருப்பதை பார்த்த உடனே, கோபம் அடைந்து அவருடன் மோதினார். இதையடுத்து அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை. ஆனால் அவர் இவான்கா டிரம்புடன் மோதல் போக்கை கையாளுவதைப் பார்த்த விமான சிப்பந்தி ஒருவர், அவரிடம் சென்று அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர், “அவர்கள் நமது நாட்டை அழிக்கின்றனர். இப்போது நமது விமானத்தையும் அழிக்க முயற்சிக்கின்றனர்” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த சம்பவம் பற்றி விமான நிறுவனம் மேலும் கூறுகையில், “அந்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றும் முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. அந்தப் பயணிக்கு அடுத்த விமானத்தில் இருக்கை ஒதுக்க மாற்று ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவித்தது*

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here