நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி, 8.8 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு கால பலனில் கணிசமான தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பிற சிறுசேமிப்பு திட்டங்களை விட பிபிஎப் வட்டி விகிதம் கவர்ச்சிகரமாக உள்ளது. இதுவரை, விலைவாசி உயர்வையும் தாண்டி இந்த திட்டம் பலன் அளிக்கிறது. ஏற்கெனவே 8.7 சதவீதமாக இருந்த பிபிஎப் வட்டி, 8.1 சதவீதமாகவும், பின்னர் 8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
கடந்த காலாண்டுகளில் பண வீக்கத்தையும் தாண்டி இந்த திட்டம் 1.91 சதவீதம் முதல் 4.08 சதவீதம் வரை லாபம் தந்திருக்கிறது. இது வரும் ஜனவரி - மார்ச் காலாண்டில் மேலும் கால் சதவீதம் அல்லது, ஒரு சதவீதம் கூட குறைக்கப்படலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கி எப்.டி போல அல்லாமல், பிபிஎப் லாபத்துக்கு வரிச்சலுகையும் உண்டு.
இதுபோல், வங்கி டெபாசிட்டை விட லாபமான 8 சதவீத வட்டி வழங்கப்படும் தேசிய சேமிப்பு பத்திரம் போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டியும் குறைக்கப்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிபிஎப், கிசான் விகாஸ் பத்திரம், செல்வமகள் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கு நடப்பு காலாண்டுக்கான வட்டி ஏற்கெனவே 0.1% குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக