ராஜகோபால ஆச்சாரியார் பற்றிய சில தகவல்கள் :-
🌴 இவர் பிறந்த ஆண்டு 10 டிசம்பர் 1878
🌴 இவர் பிறந்த ஊர் - தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி மா)
🌴 காந்தியடிகள் உடன் சேர்ந்து தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.
🌴 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்
🌴 வழக்கறிஞர் ஆக பணியாற்றினார்
🌴 சேலம் நகரச் சபை தலைவராக பணியாற்றினார்.
🌴 ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட தன் வழக்கறிஞர் பணியை துறந்தார்
🌴 1930 திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார்
🌴 உப்பு சத்தியாகிரகம் முடிந்து 9 மாதம் சிறை தண்டனை பெற்றார்
🌴 1935 இந்திய அரசு சட்டத்தினை தொடர்ந்து சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றார்.
🌴 பூரண மதுவிலக்கு திட்டம் கொண்டு வந்தார்
🌴 தாழ்த்தப்பட்டோர் ஆலய பிரவேச மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கினார்
🌴 1939 ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுப்படுத்தியதை கண்டித்து தன் அமைச்சர்களின் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்
🌴 1942 ஆகஸ்ட் புரட்சியில் பெரும் பங்கு ஆற்றினார்
🌴 1943 ஜின்னாவின் தனி நாடு கோரிக்கை யை ஆதரித்தார்
🌴 1944 ராஜாஜி திட்டம் ஒன்றை ஏற்படுத்தினார்.
🌴 1947 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆக பதவியேற்றார்.
🌴 1952 மீண்டும் தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
🌴 சுயராஜ்யம் என்ற பத்திரிகை நடத்தினார்.
🌴 இவர் இயற்றிய நூல் சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து
🌴 1954 பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
🌴 இவர் இறந்த ஆண்டு - 25 டிசம்பர் 1972
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக