Flash News:திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

Flash News:திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

பொதுமக்கள் தங்க நகை வைத்துக் கொள்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கத்தில், புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1916ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com   ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here