🏹காலை செய்திகள் 🏹
*புளோரிடா துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி; 9 பேர் காயம்*
*சென்னை: சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்*
*திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்*
*இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என 68 சதவீதம் பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.செப்டம்பர் 26 ம் தேதி முதல் அக்டோபர் 3 ம் தேதி வரை பாகிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 1835 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்தியா - பாக்., அமைதி பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என கேட்கப்பட்டது.
இதற்கு 68 சதவீதம் பேர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். 31 சதவீதம் பேர் எதிர்ப்பதாகவும், ஒரு சதவீதம் மக்கள் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்*
*''தீபாவுடன் கைகோர்த்து, அ.தி.மு.க.,வை உடைக்க முயற்சிப்பதாக பரவிய தகவல் வதந்தி,'' என, முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்*
*இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி கொல்லப்பட்டார் புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல்*
1] *♈🇮🇳🌴 *புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீறி ஆளுநராக உள்ள கிரண்பேடி மூலம் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெறும் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்*
♈🇮🇳🌴2] *2020ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் வரை தற்போதைய அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதென இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்*
♈🇮🇳🌴*நிலத்தடி நீரை அபகரிக்கும் சுயநல மருத்துவமனை. ப்ரியா மருத்துவமனை ஜெனெரேட்டர் சத்தத்தால் குடியிருப்புவாசிகள் அவதி. நேற்று இரவு அந்த மருத்துவமனை ஜெனரேட்டரை இயக்கியதால் அந்த ஓசையினால் இரவு அருகில் நோயாளிகள், வயதானோர் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டனர்.மும்முனை மின்சாரம் சீராக இருந்தும் ஜெனரேடரை எதற்காக பயன்படுத்தினார்கள்.நிலத்தடி நீரை உருஞ்சுகின்றனரா என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர்.சென்னை ராயபுரம்.கப்பல் போலு தெரு*
♈🇮🇳🌴3] *கென்யாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், அரசாங்கம் அறிவித்த 40 சதவிகித சம்பள உயர்வை நிராகரித்துள்ளனர்*
♈🇮🇳🌴4] *சிரியாவில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான அட்மிரல் குஸ்நெட்சோவ் மத்திய தரைக்கடலில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது*
♈🇮🇳🌴5] *பிரேசிலின் வட மாநிலமான ரோரைமாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில், சக கைதிகளால் 33 சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
♈🇮🇳🌴6] *சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானங்கள் வருகையும் இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*
♈🇮🇳🌴7] *மும்பை குர்லா பகுதியில் உள்ள கபாடியா பஜாரில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 4 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்*
♈🇮🇳🌴8] *இமாசலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை பட்டுள்ளது. மேலும் கட்டிடங்கள், வாகனங்களில் மீது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்*
♈🇮🇳🌴9] *எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி பாகிஸ்தான் இந்திய மீனவர்கள் 217 பேரை கைது செய்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை நேற்று விடுதலை செய்தது. அவர்கள் இந்திய எல்லையான வாகா பகுதிக்கு வந்தடைந்தனர்*
♈🇮🇳🌴10] *அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா நேற்று இரவு டெல்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபப்ட்டது. இன்று அவர் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*
♈🇮🇳🌴11] *பெங்களூரு புத்தாண்டு சம்பவம் : 5 வது குற்றவாளி கைது*
♈🇮🇳🌴12] *தமிழக காங்., செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது*
♈🇮🇳🌴13] *ஆர்.டி.ஓ., அலுவலக கட்டணங்கள் உயர்வு; இன்று முதல் அமல்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக