தேவேந்திர குல மள்ளர் வம்சத்தை சேர்ந்த கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன் சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ( 20.1.1650) அன்று எழுதப்பட்ட திருமண வாழ்த்துப்பாடல் 42 ஏடுகளை கொண்டது. முந்தைய பதிவில் ஏடு 1 முதல் 20 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் ஏடு 21 முதல் 30 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓலைச்சுவடிகளை சேகரித்த தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக் குடும்பனார் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஒலைச்சுவடி
ஏடு - 21
மெய்ப்பா ஆயிரம் பொன் விரக கொடுத்தருசீர்
இஸ்டமுடனே முகூர்த்த ஈசபந்துக்காகுமென்று
அளவில்லா நற்புடவை அகலமுள்ள கோடி பணம்
முள ஆயிரம் போன்ற பொன் முன்னூறு கொண்டோடி வந்தான்
என்று அவள் கசிவக் கணமாய் சொன்னபின்பு
ஓடியதோர் கைக்கோளன் ஊற்றதெரு தனிலே
நாடியதோர் நற்புடவை நல்ல பணி சேலை தன்னை
அய்யாயிரம் பேர் கலந்துமே விலை மதிக்க
மங்கிலியக் கூரை மதிப்புடனே கொண்டு வந்தார்
வந்து நின்ற கைகோளன் மன்னவனைத் தான்தொழுது
ஏடு - 22
புடவை வகை
கோந்து செறி மார்பா குவலயத்தை ஆண்டவனே
விண்ணப்பமென நளவிரைய அடிபணிந்து
எண்ணப்படாத இசைந்ததொரு மாதிரி பார்
கூரை கொண்டு வந்தேன் நான் குவலயத்தை யாண்டவனே
சூடியதோர் கொற்றவனும் நெஞ்சக்களி கூர்ந்து
நாடியதோர் நற்புடவை நல்ல பணிசேலை தன்னை
நனை ஓட்டிலே யொசித்த நற்புடவை யானாலும்
இன்னாளிலப் புடவை லட்சத்தில் கண்டதில்லை
மன்னர் பெருமாள் மனம் கிளந்து கொண்டாடி
என்னயிவர்க்கு குயினுக்கல் கொடுப்போமென்று
நல்லோர் பெரியோர் நல்குந்தகர் எல்லாம்.
ஏடு - 23
விருந்து
எல்லோருங்கூடியிருந்து அந்தக் நதக்காலமனத்தே
அன்னமதுவாக அமுது கரிசமைத்து வைத்து
மின்னுபுகழ் வேந்தன் வேண்டிக்கோள் வேண்டியதே
கைக்கோலன்கையிற் அக்கணந் தான் கொடுத்தான்
ஆடறுத்து சோறிடுவர் சுவசெயமுதுசெய்வர்.
கூட வந்த பேர்களுக்கு கூப்பிட்டுச் சோறிடுவார்
நல்லோரைத்தான் காத்து நல்முகூர்த்த வேலையிலே
எல்லோருந்தான் கூடி இருந்தார்கள் பந்தலின் கீழ்
அன்னமுதாக அன்பாக சாப்பிட்ட பின்
ஏழுதிரிய போசத் வர்க்கங்கள் கொண்டு வந்து
முளுகுவார் நீரிடுவார் முகந்தமது போகுமுன்னே .
ஏடு - 24
தாய்மாமன்
கடுசாய பிரமனுட கற்பித்தாரப்பொழுது
நேரிட்ட பந்தலின் கீழ் நேரிட்ட நாற்காலி
வேதாவுமுன்னே விதித்தபடி தப்பது
மாதாவுடன் பிறந்த மாமனார் வந்திருந்து
மாமனார் அப்போது மணிப்புடவையும் போற்றி
மாமன் திருக்கையால் மணிப் புடவையுங் கொடுத்தார்
அரச குமாரனையும் அழகுபோல் ஒப்பி வைத்தார்
விரையவே கொண்டு வந்து வேணுமென்று சொல்லியபின்
அப்போதே சென்று அர்ச்சுனரைத் தானழைத்து
ஏடு - 25
மணமகன் அலங்காரம்
செப்பமுடதினிருத்தி சிறக்கவே ஒப்பி வைத்தார்
காதுக்கிசைந்த கவச குண்டலம் பூட்டி
மார்புக் கிசைந்த வயிர மணி மாலையிட்டு
சாந்து சவ்வாதுடனே சந்தனமும் கஸ்தூரி
சீருற்ற மேனி சிறக்கவே ஒப்பி வைத்தார்
குவலயமே சிறந்த சோகாந்தன வாலமுகத்தில்
தவலையோசி சிறந்த சந்தனமும் தான் பூசி
அன்பாலுகம் பூண்டு ஆபரணமுந்தரித்து
முத்து வண்ண சேநந்த முழு வயிர்தாவடமும்
சுந்தமரவே துலங்க அலங்கரித்தார்.
ஏடு - 26
மணமகன் மாலைகள்
தேவாங்குப் பட்டுடனே சிறக்க அலங்கரித்தார்
நாவாத வாலத்தி நன் முகத்தில் நாமமிட்டு
காலத்திலேயுதித்த கதிரொளி போலே சிறந்த
மாலைதனை வாங்கி வாள்வேந்தனென்ன சொல்வான்
வானவர்கள் கோமான் வரத்தில் வந்த மாலையிதோ
ஞானங்கலை சிறந்த நன் முனிவர் மாலையிதோ
கனறாலக்கினியெரிந்த ராவண்றான் தரித்த
நன்றாகவே புனைந்த நல்ல படமாலை யிதோ
பாலபோய மொழி பயின்ற பாவை வள்ளிமாலாக
நால்வேதனா நன்னருன் நல்கின்றமொழிபடியே
ஏடு - 27
சென்ற தினைப்புனத்தி சிற்றிடையாளை மணந்து
குன்றுருக வேல் விடுத்த குமரற்கு மாலையிதோ
வேதக்கின நேசன் விரும்புகின்ற மாலையிதோ
அன்னநாட்டிலுள்ள சுய வளசேர் தன்னாட்டில்
மன்ன னருச்சுணர்க்கு வந்த திருமாலையிதோ
செந்தாமரை மார்பில் சேர்ந்த திருமாலையிதோ
கோந்தார குலமாது கொடுக்கின்ற மாலையிதோ
நன்றாய் அர்ச்சுனருக்கு நலமுந்த மாலையிட்டு
மீன் போல பிராணப் பையுள்ள மன்னருக்கு
மணக்கோலமெல்லாம் வகையாய் அலங்கரித்து
ஏடு - 28
இனக்கமான தோழிமாரெல்லோரும் பின்னேவர
இட்டபலகையின் மேல் எங்கோ இனிதிருக்க
சட்டமுடன் மணக்காலுக்கு தழுசை நிமித்தியங்கள்
ஆவின்பால் வார்த்து அந்தணர்கள் செய்த பின்பு
முன்கையில் நீர் வார்த்து மூவரடி தொழுது
கொட்டி குலவையிட்டு குரிப்பாய முகந்த மிட்டு
முளமோனது வீருக்கு நன்றாய் முடிப்பித்த நற்புடவை
சாஸ்த்திர விதிப்படியாய் சாலியங்கள் நெய்யெடுத்து
மாங்கிலியக் கூரை மாமனார் கொண்டு வந்தார்
மாமனார் கொண்டு வந்த மாங்கிலியக் கூரை தன்னை
ஏடு -29
மாப்பிள்ளை பெண் வீடு செல்லுதல்.
வாங்கி மணவாளன் மாளிகையுள் புகுந்தான்
மாப்பிள்ளைக்குச் சகோதரியாள் மாங்கிலியங் கொண்டு வந்து
மங்கையர்க்கு பொன் பூட்ட மச்சியர்கள் வேணுமென்று
சீதனங்கள் வேனுதல் வாங்கிசைத்து நின்ற வேதியர்கள்
பட்டுப்புடவை பனிப்புடவையுங் கொடுத்து
உழவேறு பால் பசுவு ஓட்டி கொடுத்தனுப்பி
பொன் – பூட்டி போய் புதுமைதனைப் பாருமென்றான்
குடைகள்
முத்துக்குடையும் முழுவயிரத்தால் குடையும்
பச்சக் குடையும் பவளத்தால் வெண் குடையும்
வெள்ளக்குடையும் வெற்றியுள்ள நற்குடமும்
இஷ்டமுனே இருபக்கஞ் சூழ்ந்து வர
ஏடு – 30
டால்கள் குதிரைக் கொம்பு மேளம்
வண்ண டால் மகர டால் வளமாக சூழ்ந்து வர
சிங்கார டால் குடைகளை சென்றே யிருபுறமும்
குதிரையணி வகுத்து கொம்புடனே சங்கூதி
சரிபல முன்னடக்க கனகநகர் தான் முழங்க
தாளமணியோசை தவுல் முரசதிர
கொம்பெட்டுத் திக்குமங்கு முருமென
இஸ்டதவிலோசை யெத்திசையும் நின்றதிர
நன்றெனவே கூடி நல்லவர்களெல்லோரும்
சென்றுபுகுந்தார்கள் தேன்மொழியாள் வாசலிலே
காணிக்கை வைத்தொரு கன்னியரைக் காண்பதென்று
ஆணிக் கனகமப்போது வேணுமென்று
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக