முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு :தமிழக அரசு அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு :தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும் குறிப்பிட்ட 77 நோய்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 17.60 லட்சத்திற்கும் அதிகமானோர் ரூ.3,615 கோடி காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 7.11 லட்சம் பொதுமக்களுக்கு 1,286 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இந்த நிதியிலிருந்து, மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நவீன உயர் சிறப்பு சிகிச்சை மூலம் ஏழை மக்கள் பயன்பெற மாநில அரசு ரூ.35 கோடி தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கி எவ்வித செலவும் இல்லாமல் 4300 பேர் 318.42 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆறு மாதத்திற்கு மேல் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும்.

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைந்து பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னணு அட்டையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைக்கு முறையான சிகிச்சை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here