தமிழ் இணைய செய்திகள்
மாலை செய்திகள்
(22/01/2017)
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🇮🇳 *மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்கள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டது.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் குறித்தான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கவேண்டும். ஜல்லிக்கட்டை நடத்தும் குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்*
🇮🇳 *ஈரோட்டில் மாணவர்கள் ஆவேசம் - தப்பிச்சென்ற வானதி ஸ்ரீனிவாசன்.ஈரோடு அருகே உள்ள வீரப்பம்பாளையம் என்ற இடத்தில் பா.ஜ.க.சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரான வானதி சீனிவாசன் இன்று ஈரோடு வந்தார்.தனியார் தோட்டம் ஒன்றில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு நடைபெற்றது. போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி பா.ஜ.க. கொடிகள் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். கிராம மக்கள் சுமார் 100 பேர் அங்கு கூடியிருந்தனர். வானதி சீனிவாசன் வந்து பேசி ஜல்லிக்கட்டு தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து நான்கைந்து காளைகள் மைதானத்தில் ஓடியது. பா.ஜ.க.சார்பில் ஜல்லிக்கட்டு நடப்பதை ஈரோட்டில் போராடி வரும் மாணவர்கள் கவனத்திற்கு போக கொந்தளித்துப் போன மாணவர்கள் வாகனங்களில் சாரி சாரியாக வேகமாக சென்றனர். மாணவர்கள் கடும் கோபத்துடன் வரும் தகவல் கேள்விப்பட்ட வானதி உடனே அவ்விடத்தை விட்டு காரில் ஏறி வேகமாக சென்று விட்டார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🇮🇳 *மெரினாவில் 6 பெண்கள் மயங்கி விழுந்தனர்.சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 6வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் 6 மாணவிகள் மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
🇮🇳 *போராட்டக்காரர்களை வாடிவாசல் செல்ல விடாமல் தடுக்கும் போலிஸ். தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் மட்டும் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில் பல ஊர்களில் இருந்தும் இலுப்பூர் வழியாக தடுக்கச் சென்ற போராட்டக்காரர்களை இலுப்பூர் கடைவீதியிலேயே போலிசார் தடுப்பு அரண் அமைத்து தடுத்து வைத்ததால் அதே இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதால் போலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்*
🇮🇳 *தமிழக முதலமைச்சர் ஒபிஎஸ் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் திரும்பியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் வாடிவாசலை திறந்து ஜல்லிக்கட்டை நடத்திவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் ஜல்லிக்கட்டு காளை முட்டி மோகன், பாண்டியன் ஆகியோர் உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டு களத்தில் உயிரிழந்த மாடுபிடி வீரர் மோகன் ஐக்கம்பட்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாடுமுட்டி காயமடைந்த 83 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
🇮🇳 *நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த மாணவ மாறும் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த பொறியியல் மாணவர் கார்த்திக் வேல் மயங்கி விழுந்துள்ளார். மேலும் கல்லூரி மாணவி லட்சுமி எதுவும் சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுட்டதால் மயங்கி விழுந்துள்ளார்*
🇮🇳 *கும்பகோணத்தில் பயணிகள் ரயிலை மறித்து 500 இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி மயிலாடுதுறை- நெல்லை ரயிலை இளைஞர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்*
🇮🇳 *இன்று மாலை 6 மணிக்கு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் அய்யா, சிவசேனாதிபதி ஹிப்ஹாப் ஆதி, வீர விளையாட்டு கழகம் ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை கார்த்திகேய சிவசேனாதிபதி தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்*
🇮🇳 *ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சமாதனம் பேச முயற்சித்த மதுரை மாவட்ட ஆட்சியரை அலங்காநல்லூர் மக்கள் ஊருக்குள்ளேயே விடாமல் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் செல்ல முடியாதவாறு வழியெங்கும் குழிகளையும், பெரிய மரங்களையும் வெட்டி போட்டு வைத்தனர். இதனையடுத்து இருசக்கர வாகனம் மூலம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அலங்காநல்லூர் செல்ல முயற்சித்தார்.ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. இனையடுத்து நடந்தே சென்று அலங்காநல்லூருக்குள் நுழைய முயன்றார். அதுவும் கடைசியில் தோல்வியில் தான் முடிந்தது. அலங்காநல்லூருக்குள் நுழையவே மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தோல்வியுடன் அவர் மதுரை திரும்பி சென்றார்*
🇮🇳 2] *ஜல்லிக்கட்டு போராட்டம்: இரண்டு ரயில்கள் ரத்து
🇮🇳 புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக போஸ்டர்
🇮🇳 ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை பிறப்பிப்பு
🇮🇳 ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது: முதல்வர்
🇮🇳 முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை கிளம்பினார்
🇮🇳 3] *தமிழகம் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் பிரதமர் மோடி உறுதி என ஓ.பன்னீர் செல்வம் பேட்டி*
🇮🇳 4] *தமிழகத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான 'பைரவா' படம் பொங்கலுக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🇮🇳 5] *பசிபிக்கடல் பிராந்தியத் தில் நியூசிலாந்து அருகே சாலமன் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது தீவுக்கூட்டங்கள் அடங்கியது. இன்று அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.அங்கு 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பப்புவா நியூகினியாவில் உள்ள அராவா என்ற இடத் தில் கடலுக்கு அடியில் 163 கி.மீட்டர் ஆழத் தில் நிலநடுக்கம் உருவாகி யுள்ளது.நிலநடுக்கம் காரணமாக சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரத்தில் அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. கடலோரம் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்*
🇮🇳 6] *தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி நீக்க தீர்மான விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.இந்தநிலையில் அந்த நாட்டின் கலாசார துறை மந்திரியாக பதவி வகித்து வந்த சோ யூன் சன் என்ற பெண், கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் செய்து வந்த கலைத்துறையினரை கருப்பு பட்டியலில் சேர்த்ததில் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த கலைத்துறையினர், அரசின் உதவிகளைப் பெற முடியாது.அவருடன் அதிபரின் ஊழியர்கள் பிரிவு முன்னாள் தலைவர் கிம் கி சூனும் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகவும், அவர்கள் ஆதாரங்களை அழித்து விடும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதி, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டுள்ள சோ யூன் சன்னும், கிம் கி சூனும் முறையே 21 மணி நேரமும், 15 மணி நேரமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.இவர்கள் இருவரும் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.தென்கொரியாவில் அரசு வக்கீல்கள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள முதல்-மந்திரி என்ற பெயர், சோ யூன் சன்னுக்கு கிடைத்துள்ளது*
🇮🇳 7] *சிரியாவில் அமெரிக்கா வான்தாக்குதல் 100-க்கும் மேற்பட்ட அல்கொய்தா இயக்கத்தினர் கொன்று குவிப்பு*
🇮🇳 8] *ஆந்திராவில் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து:பலியானவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு*
🇮🇳 9] *நாட்டில் பண புழக்கம் பிப்ரவரி மாதத்தில் சீராகும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக