*கி.மு.*
1500 - சிந்து சமவெளி நாகரிகம்
1000 - ஆரியர்கள் காலம்
550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன
554 - புத்தர் நிர்வாணம் அடைந்தார்
518 - பாரசீகர்களின் ஆதிக்கம்
326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்
321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்
232 - அசோகரின் ஆட்சிகாலம்
*கி.பி.78 - சக வருடம் தொடங்கியது*
98-117 - கனிஷ்கரின் காலம்
320 - முதலாம் சந்திரகுப்தர்
606 - ஹர்ஷர் ஆட்சி பீடம் ஏறினார்
609 - சாளுக்கிய வம்சத்தின் தோற்றம்
622 - ஹஜிரா வருட தொடக்கம்
711 - முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்
985 - ராஜ ராஜ சோழனின் காலம்
1026 - முகம்மது கஜினி சோமநாத புரத்தை வென்றார்
1191 - முதலாம் தரேயின் போர்
1192 - இரண்டாம் தரேயின் போர்
1206 - குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உரு வாக்கினார்
1232 - குதுப்மினார் கட்டப்பட்டது
1290 - கில்ஜி வம்சம்
1298 - மார்கோபோலோ இந்தியா வருகை
1398 - தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்
1424 - டெல்லியில் பாமினி வம்சம் ஏற்படுத்தப் பட்டது
1451 - லோடிவம்சம்
1489 - அடில்ஷா வம்சப் பேரரசு பிஜாப்பூரில் ஆட்சி ஏறியது
1496 - குருநானக் பிறப்பு
1498 - வாஸ்கோடகாமா கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்
1526 - முதல் பானிபட் போர். பாபர் மொகலாய வம்சத்தை உருவாக்கினார்
1530 - ஹூமாயூன் மன்னரானார்
1539 - குருநானக் இறந்தார். ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்
1556 - ஹூமாயூன் இறந்தார். இரண்டாம் பானிபட்போர்
1564 - இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்
1571 - அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது
1576 - மேவார் மன்னர் ராணா பிரதாப் சிங் அக்பரிடம் தோற்றுப் போனார்
1582 - அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்
1600 - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வில் நிறுவப்பட்டது
1604 - சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.
1605 - மொகலாய சக்ரவர்த்தி அக்பர் இறந்தார்
1606 - குரு அர்ஜூன் சிங் மறைவு.
1627 - ஜஹாங்கீர் இறப்பு. மராட்டியத்தில் சிவாஜி பிறப்பு.
1631 - ஷாஜஹானின் அன்பு மனைவி மும்தாஜ் இறந்தார். அவர் நினைவாக தாஜ்மஹால் கட்டப்படுதல்.
1639 - ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.
1658 - ஔரங்கசீப் தில்லியின் சக்ரவர்த்தியானார்.
1664 - சிவாஜி அரியணை ஏறினார்.
1666 - குரு கோவிந்த சிங் பிறந்தார்.
1675 - சீக்கிய குரு தேஜ்பகதூர் மறைந்தார்.
1699 - சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.
1707 - முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு.
1708 - சீக்கிய குரு கோவிந்த சிங் மறைந்தார்.
1720 - பூனாவில் பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.
1748 - முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.
1757 - பிளாசி போர் நடைபெற்றது.
1760 - வந்தவாசிப் போர்.
1761 - மூன்றாம் பானிபட் போர்.
1764 - பக்ஸர் போர்.
1767 - முதல் மைசூர் போர்.
1773 - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.
1780 - சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பிறப்பு.
1784 - பிட் இந்திய சட்டம்.
1790-92 - ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்.
1796 - மார்க்ஸ் வெல்லெஸ்லி கவர்னர் ஜெனரலானார்.
1799 - நான்காம் மைசூர் போர்.
1803 - மராத்தியப் போர்.
1829 - சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.
1839 - ரஞ்சித் சிங் இறப்பு.
1845-46 - ஆங்கிலோ சீக்கியப் போர்.
1849 - ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.
1853 - இந்தியாவின் முதல் இரயில் பாதை மும் பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது.
1857 - ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.
1858 - ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்.
1861 - இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், இந்திய நீதிமன்றச் சட்டம்.
1899 - கர்சன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் பதவியேற்பு.
1905 - முதல் வங்கப் பிரிவினை.
1906 - முஸ்லீம் லீக் உதயம்.
1908 - செய்தித்தாள் சட்டம்.
1909 - மின்டோ-மார்லி சீர்திருத்தம்.
1915 - இந்திய ராணுவச் சட்டம்.
1919 - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.
1921 - வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.
1922 - சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.
1923 - சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.
1925 - சித்ரஞ்சன் தாஸ் என்கிற சி.ஆர்.தாஸ் இறப்பு.
1928 - சைமன் கமிஷனை அனைத்து கட்சிகளும் புறக்கணித்தல்.
1929 - இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்தல்.
1930 - சட்டமறுப்பு தொடர்தல் - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.
1931 - காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.
1932 - மூன்றாம் வட்டமேஜை மாநாடு.
1934 - சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.
1935 - இந்திய அரசுச் சட்டம்.
1940 - இந்தியாவை பங்கிட வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.
1942 - கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பம்பாய் மாநாடு அங்கீகரித்தது.
1943 - வேவல் பிரபு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
1946 - கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம்.
1947 - இந்தியா சுதந்திரம் அடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக