நீட் தேர்வும் கோச்சிங் சென்டர்களின் ₹பணம் பிடுங்கும் திருட்டுத்தனமும் ...இவற்றை முறியடிப்பது எப்படி ..?..? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வும் கோச்சிங் சென்டர்களின் ₹பணம் பிடுங்கும் திருட்டுத்தனமும் ...இவற்றை முறியடிப்பது எப்படி ..?..?


-------------------------------------------------------------http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
-------------------------------------------------------------
1) நீட் தேர்வுக்கான கோச்சிங் கட்டணம் மிகவும்
அதிகம். லட்சக்கணக்கில் ரூபாய் செலவாகும்
என்று பலரும் பீதியைக் கிளப்பி வருகின்றனர்.

2) இது உண்மையா, குறைந்த கட்டணத்தில் நீட்
கோச்சிங் பெறுவதற்கு வாய்ப்பே இல்லையா?
இது பற்றி ஆராய்வோம்.

3) முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பாடம் எடுப்பவர்கள்
யார்? ஒரு வழக்கில் ஒரு முறை ஆஜர் ஆவதற்கு
ஒரு கோடி ரூபாய் கட்டணம் வாங்கும் ராம்
ஜெத்மலானியா? அல்லது கபில் சிபலா?

4) இல்லை. ப்ளஸ் டூ வகுப்பிற்குப் பாடம் எடுக்கும்
M.Sc B.Ed படித்த ஆசிரியர்கள்தான். வகுப்பில் பாடம்
எடுக்கும் ஆசிரியர்களால் மட்டுமே நீட் பயிற்சிக்கு
கோச்சிங் தர முடியும்.

5) இந்த ஆசிரியர்களை வைத்து, ஒவ்வொரு ஊரிலும்
தமிழக அரசே இலவச நீட் கோச்சிங் மையங்களை
உருவாக்கலாம்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
6) அரசு செய்யாவிட்டாலும் கூட, பெற்றோர்-ஆசிரியர்
சங்க முயற்சியில், அருகில் உள்ள பள்ளிகளின்
மாணவர்களை ஒன்று சேர்த்து, பயிற்சி மையம்
நடத்தலாம். இதற்கெல்லாம் பெரிதாகச் செலவு
ஆகாது.

7) வீட்டில் மனைவி அவிக்கிற இட்லியில் நாலு இட்லி
சாப்பிட்டால், அதற்கு ரூ 20 செலவு ஆகிறது. இதே
நாலு இட்லியை ஐந்து நட்சத்திர ஓட்டலில்
சாப்பிட்டால், 400 ரூ செலவாகும்.

8) வீட்டு இட்லியைச் சாப்பிட மாட்டேன், எனக்கு
5 ஸ்டார் ஓட்டல் இட்லிதான் வேண்டும் என்பது
நோய் மனத்தின் வெளிப்பாடே.

9) எங்கெல்லாம் மேநிலைப் பள்ளி இருக்கிறதோ,
அங்கெல்லாம் பயாலஜி வாத்தியார், பிசிக்ஸ்
வாத்தியார், கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆகியோர்
இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை வைத்து
ஒவ்வொரு பள்ளியிலும், அல்லது நாலைந்து
பள்ளிகள் சேர்ந்த எந்தவொரு மையத்திலும்
நீட் கோச்சிங் வகுப்புகளை நடத்த இயலும்.

10) வெண்ணையைக் கையில் வைத்துக் கொண்டு
நெய்க்கு அலைபவன் மூடன். உண்மையில்
தமிழ்நாட்டில், எல்லா இடங்களிலும் நீட் கோச்சிங்
வகுப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
படிப்புக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள்தான்
வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here