ஜல்லிக்கட்டு அவசரசட்டம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜல்லிக்கட்டு அவசரசட்டம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.

  *6pm-23-1-2017 
தமிழ் இணைய செய்திகள்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
* ஜல்லிக்கட்டு சட்டமசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம்

*பிரபலமான போராட்டத்தின் போது எல்லாம் சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சிக்கிறது என மார்க்கண்டேய கட்ஜூ கூறிஉள்ளார்*

*தமிழக மக்கள் அமைதி காக்க காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தியுள்ளார்*

*ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட முன் வடிவை பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.தடையை முற்றிலுமாக நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த வழிசெய்யும் வகையில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, ஓ.எம்.ஆர் சாலை , இ.சி.ஆர் சாலை , சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை சிக்னல்,கிண்டி, வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது*

  *தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவிற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கான மசோதா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது*

♈🇮🇳    *சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் வறட்சி தொடர்பான மத்திய குழுவினர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் வறட்சி நிலை குறித்து டெல்லியில் பிரதமர் மோடியிடம் பன்னீர் செல்வம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் மத்திய குழுவினர் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்*

*மெரினாவில் பேச்சு .சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மெரினாவில் போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் குறித்து போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மெரினா வந்துள்ளார்*

*மதுரை தத்தனேரி ரயில்வே பாலத்தில் இருக்கும்  கூட்டத்தினரை போலீஸார் கலைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. வைகை ஆற்றுக்குள் இருப்பவர்களை வெளியேற்ற விரட்டினர். இதனால் ரோடுகள் வெறிச்சோடி கானப்படுது*

*சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகேயுள்ள நாயர் மேம்பாலத்தில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த மேற்குமண்டல இணை ஆனையர் சந்தோஷ்குமார்ன் கார் தீவைத்து எரிப்பு, மேலும் மத்திய குற்றபிரிவு கூடுதல் ஆனையர் கணேசமூர்த்தியின் கார் கண்ணாடி அடித்து நெறுக்கப்பட்டது*

*மார்க்கண்டே கட்ஜூ வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பிரச்சனையானது, அங்கு அமைப்பு மற்றும் தலைமை கிடையாது. அதுடனைய முடிவு அங்கு ஒழுக்கமில்லை, வெவ்வேறு தரப்பு மக்கள் பல்வேறு திசைகளை நோக்கி இழுத்து செல்கிறார்கள். சில விஷயங்களில் ஒருதரப்பு மக்கள் ஒத்துக்கொண்டால், மற்றவர்கள் உடனடியாக நிராகரிக்கிறார்கள். அதனுடன், எப்போது எல்லாம் பிரபலமான போராட்டங்கள் நடைபெறுகிறதோ, அப்போது எல்லாம் சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கிறது, கெடுதலை ஏற்படுத்தவும் சில விஷயங்களை செய்கிறது,” என்று கூறிஉள்ளார்.ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இப்போது என்ன நடக்கிறதோ, அதனை பார்க்கும் போது மிகவும் வருத்தம் அடைகிறேன் என்றும் கட்ஜூ கூறிஉள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here