தமிழ்இணைய செய்திகள்
*12pm-23-1-2017 *
*சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் காவல் நிலையத்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் உள்ளே இருந்த காவலர்கள் ஜன்னலை உடைத்து வெளியேறினார். மேலும் காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த ஏராளமான பைக்குகளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் காயம்.போராட்டகாரர்கள் மீது தடியடி. சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை வெளியேற்றும் முயற்சியில், போலீசார் மீது இளைஞர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஒரு இன்ஸ்பெக்டரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது*
*அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்*
*ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகிறது. போராடும் இளைஞர்கள் போலீசின் நடவடிக்கைகை்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற மறுப்பு தெரிவித்தனர். தேசியகீதம் மற்றும் ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறியல் காரணமாக டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை முடங்கியுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் சாலைகளில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்*
*திண்டுக்கல் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் கோர்ட் வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பட்டி மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்*
*தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மகாதேவன் ஒப்புதல் அளித்துள்ளார். போலீசுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கர சுப்பு உயர் நீதிமன்ற நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளார்*
*சென்னை எண்ணூர், காசிக்கோவில் குப்பம் அருகே மீனவர்கள், மீனவ பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.ராயபுரத்திலும் சாலைமறியல்*
*திருச்சி கோர்ட் வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்**ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு திமுக துணை தலைவர் ஸ்டாலின், இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக