- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

     
  *11am-23-1-2017 *

பட்டினபாக்கம் குப்பத்து மக்கள்,கடற்கரைக்கு திரண்டு வந்தனர்*

*தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியது.இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை ஆற்றினார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க ஜெயலலிதா பெரும் முயற்சி எடுத்து சாதித்தார் என்றும், அனைத்து தளங்களிலும் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க தமிழக அரசு பாடுபடும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், கூட்டத்தொடரை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்., கட்சிகள் வெளிநடப்பு செய்தன*

*ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இதுவரை உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன*
*மதுரை: அலங்காநல்லூரில் பிப்ரவரி -1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு எடுத்தாலும் அலங்காநல்லூரில் போராட்டம் நீடித்து வருகிறது*

*எம்.பி.பி.எஸ். சேர தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு  (நீட்) தமிழக மாணவர்களை பாதிக்கும் என ஆளுநர் அவரின் உரையில் கூறியுள்ளார். மேலும் பண மதிப்பு நடவடிக்கையால் தமிழக அரசுக்கு வருமானம் குறைந்துள்ளது என்று ஆளுநர் கோரியுள்ளார்*

*திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*தமிழகம் முழுவதும் இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடத்தி வரும் போராட்டக்காரர்களை கலைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மெரினா கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது*

*சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது*

*சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில்சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள்-போலீசார் இடையே கல்வீச்சு தாக்குதல் நடந்து வருவதால் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது*

*தமுக்கம் மைதானத்தில் கூடியிருப்பவர்கள் கலைந்து செல்ல 30 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை கைவிட வில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்*

*சென்னை நடுக்குப்பத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் போலீசார் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது*

*அறவழியில் போராட்டம் நடத்திய இளைஞர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்ததற்கு திருவண்ணாமலை மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி 500 மாணவர்கள் பேர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்*

*கடலூரில் மாணவர்கள் வெளியேற்றம்*

11] *சென்னை மெரினா போராட்டகளமானது. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம் ஏற்பட்டு உள்ளது*

12] *ஏமனில் கடும் சண்டை; 66 பேர் பலி*

*டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது. உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டு பேரணிகளை நடத்தினர்*

*ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது*
* மாநில சட்டசபை தேர்தல்: அதிகாரிகள் சோதனையில் ரூ.83 கோடி பறிமுதல்*

*பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் எந்த தடையுமின்றி அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்; அவ்வாறு பிறப்பிக்கப்படவில்லை என்றால் குடியரசு நாளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தேன்.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன. எனவே, தமிழகம் முழுவதும் குடியரசு நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கைவிடப்படுகின்றன. எனினும், பின்னாளில் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து .நேர்ந்தால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் கடுமையாக போராடும் இவ்வாறு கூறியுள்ளார்*
  *தத்தனேரி ரயில் நடு பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துணை கமிஷ்னர் வேல்முருகன் ரயில்வே எஸ்.பி ராணி விஜயா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ்சார் மாணவர்கள் கூட்டத்தில் பேச்சு வார்தை நடத்தினார்கள்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here