தத்தலிக்கும் தலைநகரம்
*மெரீனா நோக்கி அயோத்திக்குப்பத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் இறங்கி பேரணியாக வருகின்றனர் . மெரினாவுக்கு செல்ல முயன்ற நடிகர் லாரன்ஸ் தடுப்பு.போலீசாருடன் லாரன்ஸ் வாக்குவாதம். கையில் லத்தியுடன் பெண்கள், குழந்தைகளை தரதரவென இழுத்துச் செல்லும்போலீசார்… கோவையில் பதற்றம்*
*சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டங்களைப் போலிசார் இன்று திங்கட்கிழமை காலை கலைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.கடும் போக்குவரத்து நெரிச்சல்.பள்ளி செல்ல முடியாமல் மாணவ,மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு.பெற்றோர்கள் கலக்கம்.தீய சக்திகளின் சூழ்ச்சியால் ஜல்லிக்கட்டு போராட்ட நண்பர்களுக்கு அவப்பெயர்.ஹிப்பாப் செய்த தவறும் ஒரு காரணம்.
*கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இளைஞர்களை கைது செய்து வேனில் போலீசார் ஏற்றினர். முழக்கமிட்டவாறு போலீஸ் வேனில் ஏறுகின்றனர் இளைஞர்கள்*
*மதுரை: அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்*
*திருச்சியில் 5 நாட்களாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 கோரிக்கைகளை முன் நிறுத்தி போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என திருச்சி இளைஞர்கள் அறிவித்துள்ளனர். நெல்லையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்*
*மதுரை செல்லூர் வைகையாற்று பாலத்தில் 5வது நாளாக ரயிலை மறித்து போராடி வந்தவர்கள் அகற்றப்பட்டனர். போராட்டக்காரர்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்*
*கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்*
*தேசிய கீதம் பாடிவிட்டு போராட்டத்தை நிறைவு செய்ய சாத்தூர் போலீசார் அனுமதிக்கவில்லை. சாத்தூரில் போராட்ட பந்தலில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர்*
*வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என மெரினாவில் மாணவர் ஒருவர் ஆவேசமாக கூறியள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக