ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட சமூகம் நடத்தியதாக கூறிய கற்பனை கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஏறுதழுவுதல் என்பதே விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் வாழ்விழ் நடைபெறும் திருவிழா.அதனை தற்கால சினிமாவிற்கு இணையாக கதை வசனம் எழுதியுள்ளனர்.வரலாற்றை திருத்த முடியாது. 400 ஆண்டுகளுக்கு முன் கருத்தமாயன் செல்வந்தர் என்று கூறியுள்ளனர் உண்மையில் 400 ஆண்டுகளுக்கு முன் கி.பி.14ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசு தமிழகத்தை ஆண்டு வந்தது .தமிழகம் பல பாளையங்களாக பிரித்து நாயக்க மன்னர்களிடம் வழங்கியது.(1529-1697) நாயக்க மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக தமிழகத்தின் மதுரையும் தஞ்சையும் மாறியது.சோழர்களின் கிராம சுயாட்சி முறை ஒழிக்கப்பட்டது.மக்கள் விழாக்கள் நடத்த தடை இருந்த காலம். பெருமாள் அழகர் ஆற்றில்இறங்கும் திருவிழா போன்றவற்றிற்கே முக்கியத்துவம் தரப்பட்டது என வரலாறு கூறுகிறது.நாயக்கர்களின் வைணவ வழிபாட்டு முறை பரப்பப்பட்டது.நிலங்கள் அனைத்தும் பாளையக்காரர்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் கருத்தமாயன் பெருநிலங்களை கொண்ட செல்வந்தர் எனக்கூறி 20 ம் நூற்றாண்டு சினிமாவை 16ம் நூற்றாண்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நாயக்கர்களை குடியமர்த்தினார்கள்.அப்பகுதிகளுக்கு நாயக்கர் என முடியும் பெயர் வைப்பது இயல்பு.ஆனால் இங்கு அழாகாத்தேவன் சொரிநாயக்கன்பட்டியில் வாழ்ந்ததாக கூறுவது குறிப்பிட்ட சமூக கண்ணோட்டத்தில் புனையப்பட்ட கதைஎன்று தெரியவருகிறது.மேலும் நாயக்கர் வம்சத்தில் மங்கம்மாள், பொம்மக்காள், ஒய்யம்மாள், கோதையம்மாள்,பாப்பம்மாள்,கெங்கம்மாள்,சோலையம்மாள் போன்ற பெயர்கள் பெண்களுக்கு வைப்பது இயல்பு.அதை சுட்டுஇங்கு கதாநாயகிக்கு பெயர் சூட்டியுள்ளனர். மேலும் தோட்டி மாயாண்டி எனக்குறிக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மதுரை உசிலம்பட்டி பகுதியில் உள்ள பிரமலைக்கள்ளர்கள் வம்சாவழிப் பெயர். அந்தப் பெயருக்கு முன் தோட்டி என்று சேர்த்து மாற்றியுள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆக ஏறுதழுவுதல் (எ) ஜல்லிக்கட்டு விவசாயம் செய்து வாழ்ந்த மருதநில மக்களின் தொன்றுதொட்டுவந்த திருவிழா என்பது வரலாற்று உண்மை. விவசாயம் தவிர்த்து மற்ற தொழில் செய்தவர்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விழாவாக ஆரம்பகாலத்தில் ஜல்லிக்கட்டு இருந்துவந்துள்ளது.18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர். வரலாறை திருத்தி கதை எழுத இது சினிமா அல்ல என்பதை அறியவேண்டும்.
மேற்கோள்கள்:
1.sri varadarajaswami temple kanchi by k.v.Raman Abhinav publication
2.en.Wikipedia.org/wiki/parantaka_chola_||
3.www.thehindu. com/features/metroplus/a-poetic-princess
4.அயோத்திதாசர் ஆய்வுகள் -ராசு.கௌதமன்
5.மருதநில மக்கள் வாழ்கை முறை
6.mehrdad shokoohy-muslim architecture of south india
Publisher :Rout ledge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக