பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளை கட்ட முனைந்துள்ளது. இவ்வாறு கட்டப்படும் தடுப்பணைகள் அங்குள்ள மலைவாழ் மக்களின் குடிநீர்த் தேவைக்காக என்று கேரள அரசு கூறினாலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டி தண்ணீர் தேக்குவதால் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பவானி பாசன நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதும், இம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும்.
மேலும் காவிரி நதியின் துணை நதிகளாக உள்ள பவானி உள்பட ஆறுகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 24ந் தேதி முதல் அன்றாடம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. விசாரணை முடிந்து விரைவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படவுள்ளதுடன் அதுவே இறுதியானது எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் கூட காத்திராமல் கேரள அரசு முன்கூட்டியே தடுப்பணைக் கட்ட முனைந்துள்ளது
எனவே, கேரள அரசு முனைந்துள்ள தடுப்பணைக் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
- ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக