மருதநில மக்கள் நிலையாகக் குடியிருந்ததனால், மற்ற நால்வகை நிலத்தாரும் மருதநிலத்தை நோக்கி நகர்ந்தனர் .. ஊர் மக்கட் தொகை பெருகிற்று. பல சிற்றூர்கள் பேரூர்களாயின. பேரூர்கள் மூதூர்களாயின. குறிஞ்சி முல்லை நெய்தல் நில மக்கள் தத்தம் நில விளைபொருள்களை மருத நிலத்தூர்கட்குக் கொண்டுவந்து, நெல்லிற்கு மாறினர். உழவர்க்குப் பக்கத் துணையாகப் பதினெண் தொழில் வகுப்பார் இருந்தனர் ..
பதினெண் தொழில் வகுப்பாரும் மருத நில மள்ளர்களில் இருந்து தோன்றினார் ..
இதனால் மக்கட் பெருக்கமும் திணைமயக்கமும் காவல் தேவையும் ஏற்பட்டன. எல்லா வகுப்பாரின் பொருள்களைப் பாதுகாக்கவும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டவும், அரசு தோன்றிற்று. இங்ஙனம் மருதநில நகர்களில் நாகரிகம் தோன்றி வளர்ந்தது.
மருதநிலக் கிழவன் (மள்ளன் )ஊராளி என்னும் முதலரசனானான்.
மருத நில ஆட்சி முறையில் அதிகார போட்டிகள் உருவாகின . இதனால் அடிக்கடி போர் எழுந்தது. நிலையான படையமைக்க வேண்டியதாயிற்று. செம்மையாக ஆட்சி செய்யவும் வெற்றியாகப் போர்முடிக்கவும் சூழ்ச்சித துணையும் வேண்டியிருந்ததனால், அறிவாற்றல் மிக்க அமைச்சனும் அமர்த் தப்பட்டான்.
போரில் தோற்ற அரசு வென்ற அரசிற்குப் பெரும்பாலும் கீழ்ப்படுத்தப்பட்டதனால், முதற்கண் ஒரே பேரூர்த் தலைவனான கிழவன் (மள்ளன் ) நிலையிருந்த ஊராளி அரசு, படிப்படியாக, பல பேரூர்த் தலைவனான வேள் நிலையும், பல வேளிர் தலைவனான மன்னன் நிலையும், பல மன்னர் தலைவனான பேரரசன் நிலையும் , வேந்தன் நிலையும் அடைந்தது.
மன்னரைப் பெருவேளிர் என்பதுமுண்டு.கிழவனாட்சி பெரும்பாலும் ஒரே திணையான மருத நிலத்தையும், வேள் மற்றும் வேளிர் ஆட்சிகள் முத்திணை (குறிஞ்சி ,முல்லை ,நெய்தல் ), நிலங்களையும் தழுவின;
வேந்தனாட்சி (மள்ளர் ) ஐந்திணை நிலங்களையும் ஆட்சி புரிந்தது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக