சங்க இலக்கியம் என்ன சொல்கிறது..விவசாயி என்பவர் யார் .... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சங்க இலக்கியம் என்ன சொல்கிறது..விவசாயி என்பவர் யார் ....

" அருந்திரல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும்  வருந்தகைத்தாகும் மள்ளர் எனும் பெயர் "என்பது திவாகர நிகண்டு வகுத்த இலக்கணமாகும். இவ்வாறே " மள்ளர் " என்ற சொல்லிற்குப் பிங்கல நிகண்டும், வடமலை நிகண்டும், சூடாணி நிகண்டும் இலக்கணம் வகுத்துள்ளது.

சிலப்பதிகாரம் ஆரம்பித்து  நற்றினை, குறுந்தொகை, ஜங்குறுநூறு, பதிற்றுப்பத்து , பரிபாடல், கலித்தொகை, அகநானூறு , புறநானூறு,  இது போன்ற செய்யுள் பகுதிகளில் என்னற்ற ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன,

சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், தொன்மங்கள் என்னும் புராணங்கள், பள்ளு இலக்கியங்கள் யாவற்றிலும் ஏரையும், போரையும் இணைத்து நடத்திய மள்ளர்களின் புகழ் பேசப்படுகிறது.

எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்ற " மள்ளர்களே இன்றைய "பள்ளர்கள்" அவர்களே பாண்டியய மரபினர் என்றும் மூவேந்தர்களின் வழித்தோன்றல்கள் என்பதை  டி.கே.வேலுப்பிள்ளை, ஞா. தேவநேயப் பாவாணர், சோ.இலக்குமிரதன் பாரதி, எம்.சீனிவாச அய்யங்கார், ஏ.வி. சுப்பிரமணிய அய்யர், வீரமாமுனிவர், கச்சியப்ப முனிவர், திருவாடுதுறை ஆதினம், நா. சேதுரகுநாதன், ஈக்காடு இரத்தினவேலு முதலியார், தொல்லியல் அறிஞர்களான இரா. நாகசாமி, நடன காசிநாதன், இரா.தேவ ஆசிர்வாதம், பேராசிரியர் குருசாமி சித்தர், அறிஞர் குணா, பேராசிரியர் தே. ஞானசேகரன், மேலைநாட்டு அறிஞர்களான வின்சிலோ, சி. ஓப்பர்ட், கே.ஆர்.அனுமந்தன், யாழ்ப்பாணத்து அறிஞர்களான .சி. கந்தையா பிள்ளை, பண்டித சவரிராயர், ஆகிய அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர்.

சேலமாவட்ட குடிக்கணக்கும் ( 1961), கேரளப் பண்பாட்டு வரலாற்று நிகண்டும் " மள்ளர்களே பள்ளர்கள் " என்பதைப் பதிவு செய்துள்ளது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முன்னால் துணை வேந்தரும், ஒப்பியல் அறிஞருமான முனைவர் மேசர் கதிர்மகாதேவன், " நான் சங்க நூல்கள் அத்தனையும் சல்லடை போட்டு சலித்து விட்டேன். வீரரும் மள்ளர்களாக இருக்கிறார்கள், மக்களும் மள்ளர்களாக இருக்கிறார்கள் :, மன்னரும் மள்ளர்களாக இருக்கிறார்கள் :, வியந்து போனேன் " என்கிறார்.

மருத நில மக்களான மள்ளர்களின் மழை வேண்டிய வேந்தன் வழிபாடே " இந்திர விழா " வாக எழுந்ததை மறைமலையடிகள், ஞா. தேவநேயப் பாவாணர் , ந.சி.கந்தையா பிள்ளை ஆகியோர் விளக்கியுள்ளனர்."

வேந்தன்," என்ற சொல்லே " இந்திரன் " என்றும், பின்னாளில் " தேவேந்திரன் " என்றும் திரிந்தது. இன்றளவும் மள்ளர் என்னும் பள்ளர்களின் நில ஆவணங்களில் " இந்திர குலம் " " தேவேந்திர குலம் " என்ற பதிவுகள் உள்ளன.

மள்ளர் என்னும் பள்ளர்களிடம் உள்ள குடும்பன், காலாடி, ஆட்சிமுறையே பாண்டியர்களின் உள்ளாட்சி அமைப்பு முறையாக இருந்தது. இதனை ஞா. தேவநேயப் பாவாணர், " மரபு வழி, பாண்டியர் குடி, குடி - குடும்பு - குடும்பம் - குடும்பன் . குடும்பு என்னுஞ் சொல் உத்திரமேரூர்க் கல்வெட்டில் ஊர்ப்பிரிவை ( Ward) குறித்தது. குடும்பம் - குடும்பன். மள்ளர் என்னும் பள்ளர் குல ஊர்த் தலைவன் குடும்பன் எனப்படுவான் " என்கிறார் பாண்டியராட்சியை வீழ்த்திய நாயக்கர்கள்.

பாண்டிய மரபினரான மள்ளர் என்னும் பள்ளர்களின் நிலங்களைப் பறித்துக் கொண்டு ஊர்க்குடும்பு ஆட்சிமுறையை ஒழித்து விட்டுப் பாளையப்பட்டு முறையைப் புகுத்தினர்.

பாண்டியர் தலைநகருள் ஒன்றான திருநெல்வேலியைப் பற்றி, திருநெல்வேலி தலப்புராணம், நாட்டுச்சருக்கம் செய் : 1, 2, 3, 34,  " மருத வெலி "என்றும் " பழனஞ்சூழ் பாண்டி நாடு " என்றும் குறிக்கிறது. இதில் செய்: 31, 48, " மள்ளர் ஊர் " என்கிறது.

நெல்லை சிலேடை வெண்பா செய்யுள்: 3 - ம் " மள்ளர் ஊர் " என்றே குறிக்கிறது. மருத நில மக்களும், நெல்லின மக்களுமான மள்ளர்களின் ஊரும், பாண்டியர் தலைநகருமான " மருதவேலி " என்பதே " நெல்வேலி " என்றாகி இப்போது ' திரு 'நெல்வேலி என வழங்கப்படுகிறது.

அவ்வாறே பாண்டியர் தலைநகருள் ஒன்றான " மதுரை " என்பதை " மருதன்துரை " என்கிறார் இரா.பி. சேதுப்பிள்ளை. சிலப்பதிகாரத்தில் ( அடி :16) " மல்லன் மதுரை " என்றும், நெடுநல்வாடையில் ( அடி :29) " மாடமோங்கிய மல்லன் மூதூர் " என்றும், திருவிளையாடற்புராணத்தில் ( செய் :27) " மல்லன் மாநகர் " என்றும் மதுரையைக் குறிக்கக் காணலாம்.

திருவிளையாடற்புராணத்தில் செய்யுள் பகுதி : 14,18,26,47, ஆகியவை " மள்ளர்களே பாண்டியர்கள் " என்பதை சுட்டிக்காட்டுகிறது. வேள்விக்குடி செப்பேடு, சிவாகாசி செப்பேடு, சின்னமனூர் செப்பேடு, தளவாய்புரச் செப்பேடு, சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி ஆகிய வற்றாலும் மருத நில மள்ளர்களின் வழித்தோன்றல்களே" பாண்டியர்கள் " என்பது புலப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here