₹₹திருட்டுத்தனமாக திரைப்படங்களை திருடி, இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் நிறுவனம், சிங்கம் 3தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை சீண்டும் படி கருத்து தெரிவித்துள்ளது
××தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலிசார் புகாரை மாற்றி எழுத சொன்னதாக சர்ச்சை.
அரியலூர் மாவட்டத்தில் ஒரு தலித் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்கில், முதலில் புகார் அளிக்க வந்த சிறுமியின் தாயிடம் காவல் துறையினர் புகாரை மாற்றி எழுதித் தருமாறு கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது
××அமெரிக்காவிற்குள் வருவதற்காக விமானத்தில் ஏற இருந்த ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பயணிகள் அதிபரின் பயணத்தடை உத்தரவு காரணமாக தடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பயணிகளை விமானத்திற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com. ★★★
^^திருப்பூர்: 'ஆதார் அட்டைக்கு, கட்டணம் செலுத்த வேண்டியதில்லை; கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பதிவு செய்தல், அரசின் நலத்திட்ட உதவிகள் என, பல்வேறு தேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பொதுமக்களை திசை திருப்பி, சிலர் காசு பார்க்கின்றனர். அவசர தேவை என்பதால், பொதுமக்களும் தீர விசாரிக்காமல், பணம் கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். பொதுமக்களிடம் இருந்து, 50 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை பெறுவதாக, புகார் உள்ளது.இச்சூழலில், 'புரோக்கர்கள், போலி நிறுவனங்களிடம், ஆதார் அட்டை பெறுவதற்காக கட்டணம் செலுத்தக்கூடாது. இதற்கென பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அரசு எச்சரித்துள்ளது. அங்கீகரிப்படாத எந்த நிறுவனத்துக்கும், ஆதார் அட்டை விவரங்களை பகிரக்கூடாது' என்று, திருப்பூர் கலெக்டர் எச்சரித்துள்ளார்*
>>36 வயதினிலே படத்துக்குப் பிறகு, மீண்டும் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திலேயே நடித்துக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஜோதிகாவையும் ஒரு நாயகியாக்க பேசினர். முதலில் ஒப்புக் கொண்ட ஜோதிகா, அட்லீயிடம் கதை கேட்டிருக்கிறார். பின்னர் கதையில் சில மாறுதல்களைச் சொல்லி, அதைச் செய்தால் நடிப்பதற்கு தயார் என்றாராம்.அப்போதைக்கு தலையை ஆட்டிவிட்டு வந்த அட்லீ, அதன் பிறகு ஜோதிகாவிடம் பேசவே இல்லையாம். சமீபத்தில் தொடங்கிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கும் ஜோதிகா வரவில்லை.அதான் ஜோ நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தொடர்கிறது!*
ππஅதிமுக அமைப்புச் செயலராக தம்மை சசிகலா நியமித்ததை சைதை துரைசாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது*
™™அதிமுக அமைப்புச் செயலராக தம்மை சசிகலா நியமித்ததில் அதிருப்தியில் இருக்கிறாராம் செங்கோட்டையன். அதிமுக பொருளாளர் பதவியே தமக்கு வேண்டும் என்பதில் செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறாராம்*
₹₹அதிமுக பொருளாளர் பதவி கிடைக்காததாலேயே முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் அமைதியாக ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது*
®®நடிக்க வந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது சத்யராஜ் மகன் சிபிக்கு. ஆனால் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது. நாய்கள் ஜாக்கிரதைக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வருவார் என்று பார்த்தால், அடுத்த படம் அவுட்.. ஜீவாவுக்கு வில்லனாக டீப்ரமோஷன்...இப்போது அடுத்த முயற்சியைத் தொடங்கியுள்ளார். இதுவும் சொந்தப் படம்தான்*
¶¶துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரிய சீர்திருத்தத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நிதி, நிர்வாக சீர்திருத்தங்களை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாக்களித்துள்ளது*
√√அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சாவடி கிராமத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட அனுமதி திடீரென மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருமணி நேரமாக மறியல் போராட்டம் நீடிப்பதால் திருச்சி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது*
||மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி, பாதுகாப்பு பணியில் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை மாவட்ட காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார். சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஜல்லிக்கட்டை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார்*
~~டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பயஸ் ஜோடி தோல்வி*
{π}தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது*
[£]காதலிக்க வற்புறுத்தி கையால் அறுத்துக்கொண்ட வாலிபரின் தொந்தரவால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரை அடுத்த பி.என். ரோடு பகுதி*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
®™தமிழ் சினிமாவில் எந்த படம் வெளியானாலும், பெரும்பாலும், அது தமிழ் ராக்கரஸ் டாட் காம் இணையதளத்தில் வெளியாகிவிடும். தியேட்டருக்கு செல்லாமல், இணையத்தில் படம் பார்க்க விரும்பும் கும்பலுக்கு, இந்த இணையதளமே சரணாகதி. சில பெரிய படங்கள் கூட, தியேட்டரில் வெளியான அன்றே, இந்த இணையதளத்திற்கு வந்துவிடும்.இந்நிலையில், நடிகர் சூர்யா நடித்து வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள சிங்கம் 3 படத்தை, அன்றைக்கே தியேட்டரில் இருந்து நேரிடையாக ஒளிபரப்புவோம் என அந்த இணையதளம் அறிவித்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படங்களை வெளியிடுபவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக்கூறி ஆவேசமடைந்த அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.இந்நிலையில், இதுபற்றி தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் தன்னுடைய முகநூலில் “ நன்றாக பேசினீர்கள். குறித்துக் கொள்ளுங்கள்.. வருகிற 9ம் தேதி எங்களுடைய நாள்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக