சென்னையை குலுக்கிய TNPTF இன் முற்றுகைப்போராட்டம் - முழு விவரம்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
வீரம்மிக்க போராட்ட துளிகள்
முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு முதல் நாளே TNPTF போராளி சிங்கங்களின் குகையான மாநில மையகட்டிடத்தை சூழ்ந்தது காவல் துறை...
DPI வளாகத்தை நெருங்க முடியா வண்ணம் காவலர்கள் குவிக்கப்பட்டனர்....
மாநிலத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்த வாகனங்களும் பூந்தமல்லி, மகாபலிபுரம், வண்டலூர், எண்ணூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மதுரவாயல் உள்ளிட்ட சென்னையின் அனைத்து நுழைவாயில்களிலும் காவல் துறையின் அடக்குமுறையால் வாகனங்கள் திருப்பப்பட்டது.
இதனால், முற்றுகைப்போராட்டம் நடக்காது என்ற மனக்கோட்டையை தகர்த்தது சங்கரநேத்ராலயா மருத்துவமனையில் நோயாளிகள் போல் பதுங்கிப்பாய்ந்து நம் சிங்கங்கள்..... காவல்துறை சுதாரிப்பதற்குள் நம் கட்டுக்குள் வந்தது DPI வளாகம்..
ஒரே ஒரு வாகனம் கூட அனுமதிக்கப்படவில்லை.
ஆனாலும் களப்பணியில் முன்வைத்த காலை புறமுதுகிட்டு பின்வைக்காதா போராளிகள் தாங்கள் வந்த வாகனத்தை அங்கேயே விட்டு பொதுவாகனமான இரயிலேறி போராட்டக்களத்தை சூழ்ந்து காவல் துறையை கதிகலங்கவிட்டது.
நம்மை ஓரிடத்தில் சேரவிட்டால் நம் ஒற்றுமையும் வலிமையும் உலகறிந்துவிடும் என எண்ணி நம் தோழர்களை சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பூந்தமல்லி, ஆயிரம்விளக்கு, புதுப்பேட்டை என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்தனுப்பப்பட்டனர். ஆனால் சிறைபிடித்தது சிங்கங்களை அல்லவா? வாகுண்டேழுந்த வேங்கைகள் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி அனைத்து இடங்களிலும் மறியல் நடத்தியது. அந்த ஒற்றை கோரிக்கை என்ன தெரியுமா? வெவ்வேறு இடங்களில் உள்ள நாங்கள் அனைவரும் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சேர்க்கப்படவேண்டும். பணிந்தது காவல்துறை.
வாகனங்களை வழிமறித்து திருப்பிய காவல்துறையே தன் சொந்த வாகனத்தில் கொண்டுவந்து குவித்தது. 10000 என்ற இலக்கை தாண்டியது எண்ணிக்கை.
இதனிடையில் கல்வித்துறை செயலர் இயக்குநருடன் நம் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றது. சுமார் 01:30 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியளிக்கப்பட்டது.
தீரமிக்க போராட்டம் திசையெங்கும் பரவ மாற்றுசங்கத்தினரும் நம் வீரத்தை வியந்து களத்திற்கே வந்து ஆதரவளித்த அரியநிகழ்வும் நடந்தது.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் திரு.தாஸ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் நிறுவனர் திரு.ஆ.மாயவன், தமிழ்நாடு நடுநிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் திரு சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நமது மாநில பொதுசெயலாளர் திரு. செ.பாலச்சந்தர் அவர்களும், தலைவர் திரு.மோசஸ் அவர்களும்பேச்சுவார்த்தையை குறித்து விளக்கினார்.
மாநிலப்பொருளாளர் திரு.ச.ஜீவானந்தம் அவர்கள் நன்றி கூறினார்.
*முற்றுகைப்போரட்டத்தால்*
👉🏻 CPS வல்லுநர் குழு அறிக்கை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
👉🏻எட்டாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண் களையப்படும்.
👉🏻எட்டாம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி என்ற நிலை தமிழகத்தில் தொடரும்.
👉🏻தேனி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு. மொக்கதுரை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
👉🏻வேலூர் மாவட்ட AEEOக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
👉🏻B.ED.கற்பித்தல் பயிற்சி, இளையோர் மூத்தோர் ஊதிய முரண், பொருளாதாரம், வணிகவியல், நடுநிலைப்பள்ளி த.ஆ B.LIT. ஊக்கவூதிய உயர்வுதொடர்பான கோரிக்கையில் உரிய செயல்முறை வெளியிடப்படும்.
👉🏻எதற்கும் அசராத அதிகார மையமாக வலம் வந்த கல்வித்துறை செயலாளர் அவர்களையே அசரவைத்த பாங்கு.
குறிப்பு:
இந்த உறுதிமொழிகளை கேட்டுக்கொண்டு வெற்றி வெற்றி கோரிக்கைகள் வெற்றி போராட்டம் வெற்றி எனக்கூறி கலிப்படைய நாங்கள் ..........அல்ல.
இப்பொழுதும் நிதானத்துடன் போராட்டம் கைவிடப்படவில்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுதிமொழி நிறைவேற்ற வில்லை என்றால் போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கையுடன்.
இதுதான் *TNPTF*ன் அடையாளம்.
வீதியில் இறங்கிப் போராடாமல் அநீதி களைய முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக