தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிந்தனை சிற்பி தோழர். ம.சிங்காரவேலர் பிறந்தநாள் 11.02.2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிந்தனை சிற்பி தோழர். ம.சிங்காரவேலர் பிறந்தநாள் 11.02.2017

இன்று (11.2.2017) 'தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்' சிந்தனை சிற்பி தோழர். ம. சிங்காரவேலர் பிறந்த நாள். சாதியற்ற சமதர்ம வாழ்வே அவர் லட்சியம். சாதிய ஏற்றத்தாழ்வு மிக்க சமூக அமைப்பை மாற்றிட  திரு. அயோதிதாச பண்டிதர் வழியில் திரு. லஷ்மிநரசு உடன் இணைந்து பௌத்த சங்கம் நிறுவி புத்தரின் சமத்துவ வாழ்விற்கான கோட்பாட்டை பரப்பியவர்.  அறிவியல் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்று சொன்னவர். ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் போதே, நீதிகட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சி நடத்திய மாநகராட்சி பள்ளிகளில் மதியம் சத்துணவு அளித்து உழைக்கின்ற மக்களின் குழந்தைகள் அரோக்கியமாக வளர வித்திட்டவர். அவர் பிறந்த நாளில் பொதுப் பள்ளி முறைமைக்கான போராட்டத்தை வலுவாக முன்னேடுப்போம். உலக வர்த்தக அமைப்பின் கீழ் கல்வியில் சந்தை அனுமதிக்க துடிக்கும் இந்திய அரசின் மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கெதிராய் போராட்டங்களை வலுப்படுத்த உறுதி ஏற்போம். இந்திய அரசமைப்புச்சட்ட நேக்கமான சாதியற்ற, சமத்துவ சமூகம் படைக் அரசின் பொறுப்பிலும் செலவிலும் கல்வி. அத்தகைய கல்வி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here