பூனா ஒப்பந்தம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பூனா ஒப்பந்தம்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
-------------------------------------------             
     

ஆண்டாண்டு காலமாக கல்வி,பொருளாதாரம் ,சமூக நிலை என எல்லா வகையிலும் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இருளில் தள்ளப்பட்ட ஒரு சமூகம் இனியும் முன்னேறவே வாய்ப்பு இல்லாத நிலையில் அச்சமூகத்தில் ஒரே ஒருவனுக்கு மட்டும் கல்வியறிவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவனோ எவரையும் விஞ்சும் தன்னிகரற்ற அறிவுடன் மேலெழுந்து வருகிறான்.
இன்னும் இருளில் கிடக்கும் கோடிக்கணக்கான தன் மக்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர துடிக்கிறான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அதனை முற்றாக நிராகரிக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கிறார் காந்தி.

தேசமே அவரது உயிருக்காக கண்ணீர்விட்டு கதறுகிறது.
இச்சூழலில் அம்பேத்கரின் கொள்கை காந்தியின் உண்ணாவிரத சூழ்ச்சியால் உளவியல் ரீதியான அரசியல் அணுகுமுறையால் கொஞ்சம் தளரத் துவங்கியது. இதனால் அம்பேத்கருக்கு துரோகி, கல்நெஞ்சன் என பல பட்டங்கள் கிடைத்தன.
இறுதியாக அன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பல தலைவர்களின் நெருக்கடியால் அம்பேத்கர் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தார். பிறகு ஏர்வாடா சிறைக்கு காந்தியை சந்திக்க அம்பேத்கர் சென்றிருந்தார் உடன் குழுவினருடன். தனது நிலையிலிருந்து சற்றும் பின்வாங்காத நிலையில் இருந்தார்.

சில நிமிட உரையாடலுக்குப் பின் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் காந்தி – சில நிபந்தனைகளுடன். அம்பேத்கருக்கோ தன் மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். ஆனால், காந்தியின் உடல் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலை. எனவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான பிரத்தியேகமான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் இரண்டாவது வாக்குரிமையை அவர் கைவிட வேண்டி வந்தது.

மற்றபடி குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் அனைத்துச் சாதியினரும் சேர்ந்து வாக்களித்து தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடந்து பின்பு இறுதியாக செப்டம்பர் 24 ஆம் தேதி சனிக்கிழமை ஏகமனதாக முடிவுக்கு வந்தது. இதுவே வரலாற்றில் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தம் ஆகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாக அம்பேத்கரும் காந்தி மற்றும் இந்துக்களின் சார்பாக மதன்மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டனர். சாட்சியாளர்களாக ராஜாஜி, தேவதாஸ் காந்தி, ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராகா, டாக்டர். ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

காந்தி மட்டும் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் அறியாமையிலிருந்து முழுவதும் விடுபட ஏதுவாக இருந்திருக்கும்.

வாழ்க...
புரட்சியாளர் அம்பேத்கர்
---------------------------------------------
வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here