ஜியோ சலுகை மார்ச் 31இல் முடிந்த பிறகு கால், ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது என அம்பானி அறிவித்துள்ளார். மேலும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை இலவச டேட்டா வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார் .மும்பையில் இருந்து பல்வேறு சலுககைகளை அறிவித்து முகேஷ் அம்பானி பேசியதாவது:
* ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 மார்ச் 31ஆம் தேதி வரை இலவச டேட்டா தொடரும்
* இந்த சலுகை ஏற்கனவே இந்த சேவையில் சேர்ந்தவர்களுக்கும், வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேருபவர்களுக்கும் பொருந்தும்.
* ஜியோ பயன்பாட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 100 கோடி GB-க்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நாளைக்கு 3.3 கோடி GB பயன்பாட்டுக்கும் அதிகமாகும்.
* நாட்டில் உள்ள மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை வைத்து இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களைவிட ஜியோ 4G-க்கு அதிக ஸ்டேஷன்கள் உள்ளன.
* கடந்த 170 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு 7 வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது
* மொபைல் டேட்டா பயன்பாட்டில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
* தினமும் 5.5 கோடி மணி நேர வீடியோ பயன்பாட்டை ஜியோ மேற்கொண்டு வருகிறது.
* 2017ல் நாட்டின் மக்கள் தொகையில் 99 சதவீத வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ பெற்று இருக்கும்
* ஆதார் முறையில் வாடிக்கையாளர்கள் சேர்ப்பு மற்றும் மொபைல் எண் மொபிலிட்டி ஆகியவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்
* டிஜிட்டல் வாழ்க்கையில் டேட்டா என்பது மனிதனுக்கு ஆக்சிஜனைப் போல் ஆகிவிட்டது.
* ஏப்ரம் 1ஆம் தேதியில் இருந்து ஜியோ கட்டணம் அமலுக்கு வரும்.
* ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னரும் ''வாய்ஸ் கால்'' இலவச சேவை தொடரும்
* போட்டியாளர்களை சமாளிக்க கூடுதலாக 20 சதவீத டேட்டாவை ஜியோ வழங்கும்
* தொலை தொடர்பு இயக்குனர்கள் மூலம் டேட்டா திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, மேலும் 20 சதவீத டேட்டா அதிகரிக்கப்படும்
* ஜியோ அடிப்படை உறுப்பினர் திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 99 செலுத்த வேண்டியது இருக்கும்
* முதல் ஆண்டில் இந்தக் கட்டணம் மாதத்திற்கு ரூ. 99 ஆக இருக்கும். அடுத்த ஆண்டில் இருந்து இது மாதத்திற்கு ரூ. 303ஆக உயர்த்தப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக