இரவு செய்திகள் 26/02/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 26/02/2017

🏹தமிழ் இணைய செய்திகள் 🏹
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

  🏹 இரவு செய்திகள்🏹
   🏹  26/02/2017🏹
*💰💰எல்லா தவறுகளையும் செய்யும்போது வேடிக்கை பார்த்துவிட்டு எப்படிங்க இப்படியெல்லாம் பேச மனம் வருது.நிதி முறைகேடு செய்பவர்கள் சுதந்திரமாக இங்கிலாந்தில் தங்க அந்நாட்டு தாராளமய ஜனநாயகம் இடம் கொடுப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்*

*🚤⛵தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 பேர் உயிரிழந்தனர். கடலில் விழுந்து தத்தளித்ததில் 7 பேர் மீட்கப்பட்டனர்*

*🏹டெல்லி பஹதூர் ஷா சஃபர் சாலையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 4 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்*

*📻முதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி., ஆலோசனை*

*😇😇நெல்லையில் கைதி கொலை: 4 போலீசார் சஸ்பெண்ட்*

🚚மேகாலயா: தடுப்பு சுவரில் லாரி மோதி 16 பேர் பலி*

*✈பிப்.,28ல் அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு செயலர்*

*🏹சட்டசபை தேர்தல் நடக்கும் உ.பி., உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சட்டசபை தேர்தலை விட தற்போது அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது*

*🔫அமெரிக்காவை விட பிரான்சில் துப்பாக்கி கட்டுப்பாடு நடவடிக்கைகள் பலமாக உள்ளது என டிரம்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், என் நண்பர் ஒருவர் பாரிஸ்க்கு வருடா வருடம் சுற்றுலா போய் வருவார். சில வருடங்கள் கழித்து நான் அவரை சந்தித்தேன். அப்போது அவரிடம், தற்போது பாரிஸ் எப்படி இருக்கிறது என கேட்டேன். அதற்கு அவர் நான் அங்கு போய் 5 வருடங்கள் ஆகி விட்டது என என்னிடம் கூறினார்.தீவிரவாத அச்சுறுத்தலால் அவர் அங்கு செல்வதில்லை என்பதை அவர் அப்படி குறிப்பிட்டார் என டிரம்ப் கூறியிருந்தார்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே தன் கருத்தை கூறியுள்ளார். அதில், கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிலிருந்து அதிகம் பேர் பிரான்ஸ் வருகிறார்கள்.பிரான்சில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுத்த கடும் முயற்சியால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.பிரான்ஸில் ஆயுதங்களோடு யாரும் மக்கள் கூட்டத்தில் நுழைவதில்லை. அமெரிக்காவை விட பிரான்ஸில் துப்பாக்கி கட்டுப்பாடு நடவடிக்கைகள் நன்றாக உள்ளது என அவர் கூறியுள்ளார்*

*🔍🔍உண்மைய சொன்னா மீடியாவை பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள், ஜிகாதி தீவிரவாதி மாற்றிவிடுவீர்களா !மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் என பிரதமரை சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்தே இதை நான் பார்க்கிறேன். தமிழ் தேச பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள், ஜிகாதி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனித்தமிழ்நாடு பேனர் இருந்தது. அந்த போராட்டத்தை அரசியல் கலப்பு இல்லாதது, அறப்போராட்டம் என வேண்டுமென்றே கூறி ஊடகங்கள் ஏன் பிரிவினை சக்திகளை தூண்டுகிறீர்கள்?மகாசிவராத்திரியில் சிவன், பார்வதியைப் பற்றி பேசுவது தான் முக்கியம். இது ஆன்மீக தேடல். அதில் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?. பிரதமர், பி.ஜே.பி.க்கு விரோதமாக தமிழ் மக்களை தூண்டி விடுவதை ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் ஆவேசமாக.ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில், "நாடு நலம் பெற வேண்டும் என்றால் மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும்," என பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான இல.கணேசனும், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தகக்து*

🏹கணவர் செய்த கொடுமையால் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ*

💍பன்னீர் செல்வம் தற்போது அணிய ஆரம்பித்துள்ள ராசிக்கல் மோதிரம், சசிகலாவை வீழ்த்துமா -மறைந்த முன்னாள் முதல்வர் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செயல்படுவதில் அதிக கவனம் செலுத்துவார்.அதுவும், தனது பெயர் மற்றும் நட்சத்திரக்கு ஏற்றபடி ராசிக்கல் மோதிரம் அணிந்திருப்பார்.ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலாவும் ராசிக்கல் மோதிரம் அணிய ஆரம்பித்தார்.இந்நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக போராடி வரும் பன்னீர் செல்வமும் தற்போது ராசிக்கல் மோதிரம் அணிய ஆரம்பித்திருக்கிறார்.*

🏹*பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, நடிகர் கமல், டுவிட்டர் வாயிலாக ஆதரவு தெரிவித்தார். நடிகர் விஜயும், டுவிட்டரில் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் பரவியது.ஆனால், அது என் டுவிட்டர் பக்கம் அல்ல, மர்ம நபர்கள் போலி கணக்கு துவங்கி வதந்தி பரப்புகின்றனர் என விஜய் தரப்பில் கூறப்பட்டது. கமல், விஜய் மட்டுமின்றி விஷால், நடிகையர் த்ரிஷா, நயன்தாரா உட்பட சினிமா பிரபலங்கள் பலரது பெயரில் மர்ம நபர்கள், டுவிட்டரில் போலி கணக்குகள் துவங்கி உள்ளனர்.அவர்கள் சசிகலா, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி வருவது நடிகர், நடிகையரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இதுகுறித்து, பொலிசாரிடம் புகாரும் அளித்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது*

💥*நெல்லையில் கைதி சிங்காரம் கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் மீது நடவடிக்கையை  தொடர்ந்து சிங்காரம் உடலை பெற்றுக்கொள்ள மனைவி பார்வதி சம்மதம் தெரிவித்துள்ளார்*

🏹*புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கவேண்டும் என்று  நெடுவாசலில் இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார். பொதுமக்கள் போராடக்கூடிய இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்*

*மேகாலயாவில் லாரி கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தனர்.தேவாலயத்துக்கு செல்ல லாரியில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here