முருகு மருத நிலத்தின் போர் கடவுள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முருகு மருத நிலத்தின் போர் கடவுள்

ஆரம்பத்தில் முருகனை மருதநிலத்தவர்கள் முருகு என்று அழைத்துள்ளனர். கிடாவெட்டி படையிலிட்டு, கள்ளுண்டு முருகை வணங்கியுள்ளனர் மருதநிலத்தவர்கள். இதற்கான சான்றுகள் இலக்கியத்தில் உள்ளன.

தேவ சேனா எனும் மருதநில தெய்வானையையும், குறிஞ்சி நில வள்ளியையும் இணைத்தது. குறிஞ்சி - மருதம் இணைப்பு பற்றியேயாகும். முருகனுக்கு இரண்டு பொண்டாட்டி கிடையாது. முருகன் என்றால் அழகன், குமரன், இளைஞன் என்பது பொருள். ஒருவன் குழந்தை பெற்றுவிட்டால் கிழவன் ஆகிவிடுவான். முருகனுக்கு குழந்தைகள் பற்றி கூறாததும் இளமை பற்றியதே ஆகும்.

தெய்வானை-வள்ளி என்பவர்கள் ஓர் உருவகமே, உண்மையில் முருகிற்கு மனைவி கிடையாது என்பதே உண்மை.

முருகு எனும் முருகன் மருத நில போர்கடவுள், வீரவழிபாடு தான் உண்மையானது , அதுவே மருத வழிபாடு.

திருச்செந்தூர் முருகு கோயிலில் வேந்தர் குல மருதநில பாண்டிய வம்சத்தவர்களுக்கு  அதிகமடங்கள் மரபு பெயரால் அறியப்பட்டுவருவது அதன் தொடர்ச்சியே ஆகும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலின் கருவரையில் இருந்து பூசை செய்யும் அந்தணரும் அதாவது நம்பூரரு என்பவர் மருதம் சார்ந்தவர் எனக்கூறப்படுகிறது. இவர் ஆரிய மரபினருக்கு உரிமையை விட்டுக்கொடுக்காமல் காத்துவருவதாக கூறப்படுகிறது.

மேலும், பழநி முருகு கோயில் முதல்மரியாதை வேந்தன் குலத்தவர்களுக்கு வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஆரியரை தமிழ் நாட்டில் ஆதரித்தவர்களும் மருதநிலத்தவரே என்பதும் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here