நம்பிக்கை ......நம்பிக்கை ..போட்டித்தேர்வுகளில் ..வெற்றி....வெற்றி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நம்பிக்கை ......நம்பிக்கை ..போட்டித்தேர்வுகளில் ..வெற்றி....வெற்றி

Group-IV  முடிவுகள்  ​வெளியிடப்பட்டுள்ள இந்த நிலையில் வருகிற தேர்வை ​தேர்வாளர்கள் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைப்பதற்காக.-***.

"வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்தேன்.... நான் அனுபவித்தாலும் பரவாயில்லை. என்னை பெற்ற அம்மாவை நான் வேலைக்கு சென்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும் ​சேர்ந்​தே இருந்தது. 2014ல் B.E முடித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தேன்.... அப்பொழுது என்னுடைய வீட்டில் நிறைய கடன்.. வறுமை.... என்னுடைய அம்மாவிடம் போனில் பேசும் போது என்னுடைய அம்மா சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனது என்று அழுதார்கள்..... இதை விட துன்பமான ஒரு தருணம் என் வாழ்வில் வருமா? என்று தெரியவில்லை....
என்னுடைய உலகம்  என் அம்மா மட்டுமே....

சரி.. ஒரு பக்கம் என்னை படிக்க வைத்த கடன்.... மற்றொரு பக்கம் வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் படித்தது B.E. வீட்டின் நிலைமை காரணமாக Painting வேலைக்கு சென்று கொண்டிருந்​தேன். அதுவும் Group-IV க்கு படிக்க வேண்டும் என்பதால் ஒரு மாதம் வேலைக்கு செல்லவில்லை..... என்னுடைய அம்மா ஓட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்..... கடந்த காலங்களில் வீட்டில் அரிசி கூட இல்லை.... என்னுடைய நண்பன் சுரேஷ் தான் அனைத்தும் பார்த்துக் கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தான்.... செய்த உதவியை மறப்பது உயிரை விடுவதற்கு சமம் என்பதை அறிவேன்.....நான் இப்பொழுது எடுத்து இருக்கும் மதிப்பெணுக்கு வேலை கிடைக்குமா (184/200) என்று தெரியாது....

ஆனாலும்  நான் ஏன் என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கூறினேன் என்றால் துன்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை.... அதில் இருந்து மீண்டு வருவதே சவால்.... சாவது எளிது.... வாழ்வது மிக மிக கடினம்.... இந்த தருணத்தில் சில முகநூல் குழுக்கள், இணைய தளங்கள் மற்றும் எவ்வளவோ நண்பர்கள் எனக்கு ஊக்கம் வர காரணமானவர்கள் ஆவார்கள்...

போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு நான் சொல்வது... முதலில் பள்ளி புத்தகங்களை படிங்கள்.... உங்களால் வெற்றி பெற முடியுமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.... வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை. ஒன்று போனால் மற்றொண்டு உண்டு. அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது. .. கடுமையாக உழைத்து பாருங்கள் வெற்றி உங்களை தேடி வரும்....நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here