நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தப்புமா? - ?-?-? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தப்புமா? - ?-?-?

"என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினர்" என்று ஓ.பன்னீர்செல்வம் கொளுத்திப் போட்ட வெடியால் எழுந்த தமிழக அரசியல் அதிர்ச்சி சற்றே ஓய்ந்திருக்கிறது என்று சொன்னாலும் அது உண்மை அல்ல. எடப்பாடி பழனிசாமி 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, அவருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்து விட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். எடப்பாடியோடு சேர்த்து 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

*117 எண்ணிக்கை தேறுமா?*

18-ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறி உள்ளார். பழனிசாமி தமக்கு 124 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையே போதுமானதுதான். ஆனால், இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் பலர் இன்னும் முழு மனதோடு எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
18-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை 124 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற சந்தேகம் காரணமாகத்தான் கூவத்தூரிலேயே இன்னும் அவர்களைத் தங்க வைத்துள்ளனர். எம்.எல்.ஏ-க்கள் தங்களின் கூட்டை விட்டு பறந்து விடக்கூடாது என்பதில் டி.டி.வி தினகரன் எச்சரிக்கை உணர்வோடு இருக்கிறார்.

*அதிரடி ஆர்.நட்ராஜ்*

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருந்த தருணத்தில் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,ஆர்.நட்ராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய தாக்கத்தில் மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் இதே போன்ற முடிவை எடுக்கக் கூடும். எனவே 7 முதல் 8 எம்.எல்.ஏ-க்கள் கடைசி நேரத்தில் சபைக்கு வராமல்போய்விட்டால் அல்லது எதிர்த்து ஓட்டளித்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். ஆட்சி கவிழக்கூடும்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் 10 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க-வும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டது.

எடப்பாடிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற சந்தேகம் எல்லா தரப்பிலும் எழுந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுகரசர், "அ.தி.மு.க-வுக்கு போதுமான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே எங்களுடைய ஆதரவு அவர்களுக்குத் தேவையில்லை" என்று சொல்லி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here