"நீட்" (NEET) வேண்டாம்.. இராமநாதபுரம் மக்கள் முழக்கம்...
இன்று (12.2.2017) இராமநாதபுரம் சத்திரக்குடியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. கு. காந்தியின் 'கருவேலங்காடு' சிறு கதை தொகுப்பு நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது. இராமநாதபுரத்தின் பல பகுதியிலிருந்து வந்திருந்த மாணவரும் பெற்றோறும் எங்கள் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயின்ற அரசுப்பள்ளி மாணவர்கள் SC / BC / MBC என 10 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவப்படிப்பு ( MBBS / BDS/ ) மற்றும் பொறியியல் (BE) படிப்பில் கடந்த ஆண்டு (2016-17) சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மருத்துவப்படிப்பு சேர விரும்பி இரவு பகல் என மணவர்கள் படிகின்றனர். இவர்கள் நிலை என்னவாகும்?
" நீட்" தேர்வு எழுத BC / MBC மணவர் ரூபாய்1400 /- கட்டவேண்டும். SC/ST ரூபாய் 750/- கட்டவேண்டும்? யார் கட்டுவார்கள்?
நாங்கள் என்றுமே மருத்துவர் ஆகக் கூடாது என்ற சுழ்ச்சி தான் "நீட்".
இந்திய அரசிற்கு எங்கள் கவலை புரியாதா?
தமிழ் நாட்டில் 'நீட்' வேண்டாம் என்று தமிழ் நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் எப்ப கிடைக்கும்?
முதல்வர் பதவிக்கு மக்கள் கருத்து என கூப்பாடு போடும் அரசியல் தலைவர்களும் ஊடகமும் 'நீட்' வேண்டாம் என மக்கள் சொல்லும் கருத்திற்கு மதிப்பளிக்க மாட்டார்களா?
எங்கள் குழந்தைகளின் கனவை கலைத்து விட அனுமதிக்க மாட்டோம். என அவேசப்பட்டனர். தமிழ் நாடு பொறுப்பு ஆளுனருக்கு இராமநாதபுர மக்களின் தவிப்பு புரியுமா? இன்னாள் குடியரசுத்தலைவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மாவட்டத்து மக்களின் வேதனையை அறிய வாய்ப்புண்டா? உரிய நேரத்தில் கிடைக்காத நீதி மறுக்கப்பட்ட நீதியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக