நம் நாட்டின் வங்கிகளில்
கடன் வாங்கிய கார்ப்பரேட்டுகள்
கடன்களை திருப்பிச் செலுத்தாமல்,
வராக்கடன் வழியாக அந்த வங்கிகளை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாங்கிய கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்தால் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய்களாகும். மறுபுறத்தில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நீங்கள் சுமார் 15 லட்சம் கோடி ரூபாயை உள்ளே வர வைத்து, வங்கிகளுக்கு ரொக்க உபரியாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
அதாவது வராக்கடன்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம் திவாலாக இருந்த வங்கிகளை,
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலமாக, பொதுமக்களின் பணத்தைச் சேர்த்து சொந்தக் கால்களில் நிற்க வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் கடன்களை கட்டாமல் சூறையாடியவர்கள் குறித்து உங்கள் நிலை என்ன?
சிறிய விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களைக் கட்டவில்லை என்றால், அவர்களது கால்நடைகளைப் பறிமுதல் செய்கிறீர்கள், அவர்களது நிலத்தைப் பறிமுதல் செய்கிறீர்கள்.
கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனுக்காக அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யத் தயாரா?விவசாயிகளின் தற்கொலை 26 சதவீதம் அதிகரித் திருக்கிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து விவசாயிகள் நிலைமை மேலும் மோசமாகி இருக்கின்றது.
பணக்காரர்களின் கடன்களை ரத்து செய்வதற்குப் பதிலாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யுங்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் திவாலானபோது
அங்குள்ள அரசாங்கங்கள் நிதி உதவி அளித்து அவற்றைக் காப்பாற்றின.
அதேபோல் இந்தியாவிலும், ஏழைகளின் பணத்தைக் கொடுத்து வங்கிகளை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள்.
வங்கிகளை சூறையாடிய
கார்ப்பரேட்டுகளையும்
முழுமையாக விடுவித்திருக்கிறீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக