தமிழ் இணைய செய்திகள்
மாலை செய்திகள்
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*நீதிபதி ராஜேஸ்வரன் கூறுகையில், மெரினா கடற்கரையில் கலவரத்தின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம். புகார் தருவது எப்போது என்பது பற்றி பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் விசாரணை கமிஷன் அலுவலகம் உள்ளது. விசாரணை அறிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு பின் அரசிடம் தாக்கல் செய்யப்படும். மதுரை, கோவை,அலங்காநல்லூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்படும் எனக்கூறினார்*
*தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனான முதல்வர் சந்திப்பு நிறைவடைந்து வீடு திரும்பும் போது கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோயிலை ஓ.பி.எஸ். வணங்கி சென்றார். இதேபோன்று ஜெயலலிதா கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோயிலை எப்போதும் வணங்கி செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது*
*பாஜக ஆதரவை பெற சுப்ரமணிய சுவாமியிடம் டீல்?சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது.இது சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்சியை அமைக்க மத்திய அரசின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்காக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியிடம் பேரம் பேச பட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே, சுப்பிரமணிய சுவாமி சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும். தாமதமானால் அது அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அமையும் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது*
*இன்று சீனாவில், நாளை இந்தியாவில்!!சீனாவில் காற்று மாசுபாட்டைத் தவிர்க்கும் செடிகள் நிறைந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரும் அளவில் காற்று மாசுபாடு பிரச்னையை சந்தித்துவரும் நாடுகளில் ஒன்று சீனா.அதனால், இந்த செடிகள் நிறைந்த கட்டடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் சீனாவில் உள்ள காற்று மாசுபாடு பிரச்னைகளை குறைக்க முடியும். இத்தாலிய கட்டடக் கலைஞர் ஸ்டெஃபானோ போரி பரிந்துரையின்படி இந்தக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இத்தாலியிலும் சுவிட்சர்லாந்திலும் இதுபோன்ற கட்டடங்கள் உள்ளன. ஆனால் ஆசியாவில் இதுவே முதன்முறையாகும். காற்று மாசுபாட்டைத் தவிர்க்க இது போன்ற கட்டடங்கள் இந்தியாவிலும் அமைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகிறது*
*ரஷ்யாவின் முன்னணி எதிர்கட்சித்தலைவர் அலெக்ஸெ நவால்னி அரசுக்கு சொந்தமான மர நிறுவனத்தைப் பயன்படுத்தி சொத்துசேர்த்த வழக்கின் மறுவிசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு காரணமாக ரஷ்யாவின் அடுத்த அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது.முந்தைய தீர்ப்பின் மறுவடிவமாகவே இன்றைய தீர்ப்பும் வந்திருப்பதாக நவால்னி தெரிவித்துள்ளார்.இதற்கிடையே ரஷ்யாவிலிருக்கும் மற்றுமொரு பிரதான எதிர்கட்சி செயற்பாட்டாளரான விளாடிமிர் காரா மிர்சாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் மனைவி இவ்ஜெனியா காரா முர்சா பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*வேலையிழப்பு என்பது அச்சறுத்தும் ஒன்று. எதிகாலத்தில் நமது வேலைக்கு யார் போட்டியாக இருப்பார்கள்?தற்போது பல நிறுவனங்கள் மனிதர்கள் செய்த வேலைகளுக்கு ரோபோக்களை அமர்த்துகின்றன.போட்டிச் சந்தையில் அது பெரும் உதவியாக உள்ளது.லண்டனில் இயந்திர மனிதர்கள் குறித்த கண்காட்சி ஒன்று அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது*
*மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது கூட்ட நெரிசலில், மூச்சு திணறல் போன்ற பலவித பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு நாட்களாக இரண்டு ஆம்புலன்சுகளை மருத்துவர்கள்,செவிலியர்க்ளையும் அமர்த்தி உடனுக்குடன் சிகிச்சையளித்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவியது பாரிமுனையில் உள்ள சென்னை நேஷனல் மருத்துவமனை. எண்ணுரிலுள்ள சென்னை நேஷனல் மருத்துவமனையிலிருந்து கடலில் கொட்டியுள்ள எண்ணைகழிவுகளை அகற்றுபவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ குழுவுடன் ஒரு ஆம்புலன்சை நிறுத்தி வைத்துள்ளனர் பல நாட்களாக சேவை மனப்பான்மையுடன்.இன்று சென்னை துறைமுக பகுதியிலுள்ள மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிசேகம் நிகழ்ச்சியில் குவிந்த பக்தர்களின் நலன்னுக்காக கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் கேட்டுக் கொண்ட காரணத்தினாலும் ஒரு மருத்துவ குழுவுடன் தயார் நிலையில் ஒரு ஆம்புலன்சை நிறுத்தி வைத்திருந்தது. இந்த சிறப்பான மக்கள் நல பணியை செய்துவரும் சென்னை நேஷனல் மருத்துவமனை நிர்வாகத்திற்கு விஸ்வரூபம் நன்றி தெரிவித்து கொள்கிறது*
*வறுமை காரணமாக இரானுக்கு பொருட்களை கடத்தும் குர்து கடத்தல்காரர்களின் நிலை.இந்தக் கடத்தல்காரர்கள் இராக் மற்றும் இரான் ஆகிய இருதரப்பாலும் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்*
*தனது மகள் இவான்கா உரிமையாயாளராக உள்ள ஒரு நவநாகரீக ஆடை தயாரிப்பை தங்களின் விற்பனையிலிருந்து நிறுத்திய ஒரு ஆடை விற்பனையாளர் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்*
*சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஓ. பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தால், திமுக அவருக்கு ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்*
*ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு தர வந்தவர்களை வெளுத்து வாங்கியது தமிழக காவல்துறை. தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிகழும் சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளது காவல்துறை.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியுள்ளது. சாதாரண பொது மக்களுக்கு தமிழக காவல்துறை இயங்காது என்பதை வெளிப்படையாகவே உணர்த்திவிட்டது.விஸ்வரூபம்*
*பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் சிறுமியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. மாங்காடு அடுத்த மதனந்தபுரம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்*
*வங்க மொழிப்படங்களில் நடித்து வரும் திரைப்பட நடிகை பிடாஸ்டா சஹா மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்*
*‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குநர் நவீனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்கியிருக்கும் படம் கொளஞ்சி.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நய்னா சர்வார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 24-ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது*
*நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை இன்று சந்தித்தார்*
*என் மகளுக்கு நான் நடிகை என்பது தெரிய வந்ததும் என் அம்மா சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். தெறி படத்தில் நடித்த பிறகு நைனிகா ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவளையே சொல்லிக் கொள்கிறாள் என்று மீனா தெரிவித்துள்ளார்*
*நடிகை சாட்னா டைட்டஸ் தனது காதலரான கார்த்திக்கை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் மூலம் பிரபலமானவர் சாட்னா டைட்டஸ். அவர் அந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை காதலித்தார்.இதையடுத்து இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்*
*திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளது. நாமக்கல்லில் வரும் 13ம் தேதி வரை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது*
*நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 9ம் வரை ஒத்தி வைப்பு*
*ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது*
*வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். 10 பவுண்டரிகளுடன் விராட் கோலி சத்தத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 102 ரன்களுடனும், ரஹானே 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்*
*மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தது. காலை 9 மணி முதல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி 4 மணிக்கு நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 354 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைவருக்கும் ஆட்சியர் வீரராகவ் ராவ் நன்றி தெரிவித்தார்*
*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,835-ஆகவும், சவரன் ரூ.22,680-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.80 ஆகவும், ஒரு கிலோ ரூ.42,775-ஆக விற்பனை செய்யப்படுகிறது*
*வர்த்தக முடிவில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 28,329 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 8,778புள்ளிகளாக உள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக