இந்திரன் எனபது நேரடியாக அரசன் என்றே பிராகிருதம் மற்றும் சமற்கிருதம் கூறுகிறது.
மேலும் , இந்திரன் என்ற சொல்லாடல் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளர்களை பற்றிய வரலாற்று ஆய்வில் பள்ளர்கள் தங்களை " இந்திர குலம்" என்றும், " தெய்வேந்திர குடும்பன்"என்றும் பதிவிட்டுள்ளனர்.
இதனை பல்வேறு நில ஆவணங்கள் , செப்பேடு, கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
அரசர்கள் சமற்கிருதம் , பிராகிருத சொல் பூண்ட அரசன் என பொருள் பூண்ட சொற்களை பூண்டனர். அந்த வகையில் பள்ளர்களும் அரசர்க்குரிய சொல்லான " இந்திர குலம்", " தேவேந்திர குலம்" என அழைத்துள்ளனர்.
" இந்திர குலம்" என்பதை " அரச குலம்" என்றே பொருள் கொள்ளவேண்டும். மேலும் , அரச பள்ளர் மற்றும் அரச பள்ளி என்ற பள் மரபின் பிரிவாரை உற்று நோக்குக!
ஆரம்பத்தில் மருத நில அரசன் வேந்தன் எனப்பட்டான், அவ்வேந்தன் நானிலம் ஆளும் பொழுது தேவ வேந்தன் , இந்திரன் , தேவேந்திரன் எனப்பட்டான்.
கி.பி.12 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த குலசேகர பாண்டிய மன்னன் பள்ளர்களை பற்றி கூறும் பொழுது " இவ்வூர் குடும்பரில் பெரிய தேவ பள்ளன்" என்று முது குடி கல்வெட்டு மூலம் கூறுகிறார். இங்கு தேவ(Deva) என்பது அரசனை குறிப்பது. மிகப்பெரும் அரச மரபை சேர்ந்த பெரிய தேவ பள்ளன் என்பவன் குடும்பர் என்று உறுதிபடக்கூறுகிறார்.
மேலும், உக்கிர பாண்டியன் கொடுத்த பட்டயம் அடிப்படையில் எழுதப்பட்ட சங்கரன் கோயில் கல்வெட்டு பள்ளர்களை தெய்வேந்திரக்குடும்பன் என்கிறது.
எனது பெரியப்பா இராமக்குடும்பனுக்கு சிவகிரி ஜமீன்தார் எழுதி கொடுத்த நில ஆவணத்தில் " இந்திர குலம்" இராமக்குடும்பன் என்று கூறியுள்ளார். நாங்கள் திருமால், சிவன், காளி மற்றும் முருகனை தான் வணங்குகிறோம். ஆனால் இந்திரன் என்ற அரசனை தான் மா அல், சடையன், குமரன் ( பாலகன்) என்று வழிபடுகிறோம்.
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.
தமிழ் வேந்தர் தம் கல்வெட்டு மற்றும் செப்பு பட்டையத்தை தமிழ் மற்றும் சமற்கிருதம் கொண்டு எழுதியுள்ளனர். சமற்கிருதத்தில் அரசன் என பொருள்பட்ட சொற்களை தங்களது பெயரில் சேர்த்துள்ளனர். அரசனுக்கு சமற்கிருதம் தெரிந்துள்ளது, அதே போல் அரச மரபினராகிய பள்ளருக்கும் சமற்கிருதம் தெரிந்து தான் உள்ளது. ஊர் சாவடியில் குடும்பன் மூலமே எல்லாவித அரசு நடவடிக்கைகள் நடந்துள்ளது.
எனவே அரச மரபினர் வீரன் என்று பொருள்பட வீரன்,பள்ளர், மள்ளர் என்று அழைத்தனர். பள்ள என்றால் போர் வீரர், உலகைக்காப்பவர் என்று சமற்கிருதம் கூறுகிறது. தேவ , இந்திரன் என்றால் அரசன் என சமற்கிருதம் கூறுகிறது. பள் என்பதே பள்ளன் என்பதன் மூலம். பள் ஓர் தொல் தமிழ் சொல்லே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக