"
மாலை செய்திகள்
03/03/2017
*சென்னை தண்டையார்பேட்டையில் 4-வது ரயில் முனையம் அமைக்க பரிசீலித்து வருவதாக வசிஸ்ட ஜோக்ரி விளக்கம் அளித்துள்ளார். ராயபுரத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்க சிக்கல் உள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். இம்மாத இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை வசதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்*
*சென்னை: நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான உறுப்பினர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் குழுவை தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது.1. வேல்ராஜ் - அண்ணா பல்கலை கழகம்,2. சுரேஷ் காந்தி - புவியியல் துறை,3. பாலாஜி - ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி,4. சிவாஜி - அணுசக்தி துறை*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, நடிகரும் அதிமுக பிரச்சார பேச்சாளருமான ராதாரவி, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவரின் இந்த பேச்சிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மனம் புண்படும் படி அவர் பேசியுள்ளதாகவும், மிகவும் அருவெறுப்பு, அநாகரீகம், மனித தன்மையற்றச் செயல் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்*
*ஸ்காட்லாந்து நாட்டில் உயிரிழந்த தாயின் உடலோடு 3 வயது சிறுவன் தனியாக இரண்டு நாட்கள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் லிடியா மெக்டொனால்டு தனது 3 வயது மகனுடன் வசிந்து வந்தார். மகன் 8 மாத குழந்தையாக இருக்கும்போது லிடியா கணவர் உயிரிழந்து விட்டார். லிடியா தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.லிடியாக வெகு நாட்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். திடீரென ஒரு நாள் லிடியா கடுமையாக பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் திணறி வீட்டிலேயே இறந்துவிட்டார். லிடியாவின் மகன் செய்வதறியாது தாயின் அருகில் இருந்தப்படி அழுந்துள்ளான்.பின்னர் லிடியாவின் தாய் வீட்டுக்கு வந்தபோது லிடியா இறந்து கிடப்பதை அறிந்து பின் சடலத்தை மீட்டு குழந்தையை காப்பாறியுள்ளார். சிறுவன் இரண்டு நாட்களாக பிரிட்ஜில் இருந்த உணவுகளை சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது*
*முதல்வருக்கு எதிராக உளறிய குஷ்பு-"கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள், கற்பழிப்புகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டது. பகலில் கூட நடமாட முடியாத நிலை உள்ளது. பினராய் ஆளும் கேரளம் கொடும் கிரிமினல்கள், குற்றவாளிகள் ஆளும் கேரளாவாக மாறி உள்ளது. எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆளும் மாநில அரசே குற்றவாளிகளுக்கு உறுதுணையாக உள்ளது. சினிமா பார்த்து யாரும் கெட்டுப்போவதில்லை. கேரளாவில் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பினராய் விஜயன் செயல்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது" என்று குஷ்பு உளறிக் கொட்டினார். அவரது முதிர்ச்சியற்ற இந்தப் பேச்சு அரசியல் தாண்டி அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*பிரித்தானியா தலைநகர் லண்டனில் இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து நகரின் பெரும்பகுதி மக்களை வெளியேற்றப்பட்டனர். லண்டனின் வட-மேற்கு பகுதியில் குறித்த வெடிகுண்டு ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.வெடிகுண்டை செயலிழக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை வரை இதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடசாலைகள், குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
*அமெரிக்க நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை விசாரணை செய்யும்போது அவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்ற சட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன.குறிப்பாக, மிச்சிகன் மாகாணத்தில் ஒரு வினோதமான, பெண்களுக்கு எதிரான சட்டம் அமலில் இருப்பது தற்போது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது*
*ஜேர்மனி நாட்டில் குடிபோதையில் சிக்கிய நபர் ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தான் செய்த கொலையை சுயநினைவின்றி ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தை சேர்ந்த 52 வயதான நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டி அடிக்கடி பொலிசாரிடம் சிக்கி வந்துள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அதே நபர் மீண்டும் குடிபோதையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.நபரின் தொடர் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பொலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.அப்போது மிகுந்த குடிபோதையில் இருந்த நபர் அளித்த வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீடு ஒன்றில் புகுந்து 38 வயதான பெண்ணை நாற்காலியில் கட்டிப்போட்டேன்.பின்னர், கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பினேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.நபரின் வாக்குமூலத்தில் அதிர்ச்சி அடைந்த பொலிசார் அவர் குறிப்பிட்ட இடம் மற்றும் வருடத்தில் நிகழ்ந்த குற்றம் தொடர்பாக விசாரணை செய்தபோது அவர் கூறியது அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது.உடனடியாக நபரை கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.மேலும், நபர் மீது வேறு குற்ற வழக்குகளும் உள்ளனவா என பொலிசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்*
*அதிமுக அரசை காப்பாற்றும் பொருட்டு ஆதரவு வாக்களிக்க கட்சியில் உள்ள 121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பழனியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 3 கிலோ தங்கத்திற்கும் 3 கோடி ரூபாய்க்கும் ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் இழந்து விட்டார்கள் என கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.அதிமுக எம்.எல்.ஏக்கல் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதும் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் இருந்து 500 கிலோ தங்கம் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது என வருமானவரித் துறை கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் குறித்த நகைக் கடையின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்த வருமானவரித்துறை அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கியுள்ளது.அதில், 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய மதிப்பு ஒரு கிராமுக்கு 2853 ரூபாய். ஒரு கிலோ 28 லட்சத்து 53,000 ரூபாய். மொத்தம் 500 கிலோ தங்கத்தை 142 கோடியே 65 லட்சத்துக்கு ஐக்கிய அமீரகத்தில் இருந்து வரவழைத்ததாகவும், அதை 121 எம்.எல்.ஏ.க்களுக்கு பங்கிட்டு அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4.13 கிலோ வீதம் சராசரியாக அளித்துள்ளதாக ஒப்புக்கொண்ட அவர், அந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 18 லட்ச ரூபாய் என தெரிவித்துள்ளார்.மட்டுமின்றி அந்தந்த எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கே கொண்டு போய் கொடுத்துள்ளதாக கூறும் அந்த நகை வியாபாரி, இந்த தங்கத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் 400 சவரன் நகை செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் இதுவரை தமக்கு சேர வேண்டிய 142 கோடியே 65 லட்ச ரூபாயை அ.தி.மு.க. தலைமை தரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்*
*தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தால் நீதிமன்றம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் மங்களசாமி என்பவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கில், மார்ச் 2 ஆம் திகதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என விஜயகாந்தின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதி, வழக்கை ஏப்ரல் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததோடு மட்டுமல்லாமல், குறிக்கப்பட்ட திகதியில் விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் இல்லையெனில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கண்டித்துள்ளார்*
*வெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனம், ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. மேலும் மார்ச 4ம் தேதி சனிக்கிழமை அன்று ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். கருத்தரங்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வதற்காக தொடர்வு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 04426265326 / 9600124042. கருத்தரங்கு நடைபெறும் நாள் - சனிக்கிழமை 4 மார்ச் 2017 கருத்தரங்கு நடைபெறும் இடம் - வெற்றி ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம்*
*பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்*
*என் 2வது திருமணம் பற்றி வெளியான சில வதந்திகளை பார்த்து வருத்தம் அடைந்தேன். இது ஆதாரம் அற்ற செய்தி. இது போன்ற ஆதாரமற்ற செய்திகள் என்னை மிகவும் பாதிக்கின்றன என்று விஜய் விளக்கம் அளித்துள்ளார். என் வளர்ச்சியில் மீடியாவுக்கு பெரும் பங்கு உள்ளது. அதனால் இது போன்ற வதந்திகளை தவிர்க்குமாறு கேட்கும் உரிமை உள்ளது என்று நினைக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார். காதலித்து திருமணம் செய்த இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் பிரிந்தனர். அண்மையில் அவர்களுக்கு விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது சென்னை குடும்பநல நீதிமன்றம்*
*கொல்கத்தாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடை ஒன்றில் பிரெஞ்ச் ஃபிரைஸுடன் செத்த பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது*
*கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜிம்மி கிரேவிசின் 46 ஆண்டுகால சாதனையை முறியடிக்கவுள்ளார்*
*இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். 53 மீனவர்களையும், 123 படகுகளையும் விடுவிக்கவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்*
*மஞ்சுவிரட்டின் போது உயிரிழந்த காவலர் சங்கரின் மனைவி முத்துசடச்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணையை முத்துசடச்சிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜனவரி 23-ம் தேதி நடந்த மஞ்சு விரட்டில் சங்கர் உயிரிழந்தார்*
*அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று அத்திக்கடவு போராட்டக்குழு கூறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக அத்திக்கடவு திட்டத்துக்காக போராடி வருவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்*
*புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது*
*தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 4 அலகுகளும் நிறுத்தப்பட்டத்தால் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக