அதிகாரப் போட்டியால் தமிழக மக்களின் நலன்களை வஞ்சிக்கும் அதிமுக அரசையும், திமுகவின் அதிகார வேட்கையையும், புறவாசல்வழியாக தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் தகிடுதத்தங்களையும் அம்பலப்படுத்தும் விதமாக ‘எழுவோம் தமிழகமே’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பேரியக்கம் வியாழனன்று துவங்கியது.தென்மண்டல பிரச்சாரத்தை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார்.முன்னதாக, வியாழனன்று காலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:விவசாயம் பொய்த்துப் போனதால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில்எந்தப் பொருளும் கிடைப்பதில்லை. வேலையின்மை, வறுமை அதிகரித்துள்ளது. மோடி அரசு புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் என அடுத்தடுத்து வந்த இயற்கை பேரிடர்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாஜக பரிவாரத்தால் சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்,மீத்தேன், ஷேல்கேஸ் திட்டங்களைத் தொடர்ந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் பெரும்சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு தமிழகமாணவர்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.மறுபுறத்தில் ஆளும் கட்சியானஅதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, ஊழல் வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கிருந்தபடியே ஆட்சி நடத்த முயலும் வெட்கக்கேடு.திமுகவின் அதிகார வேட்கையால் தமிழக சட்டமன்றம் வன்முறைக் களமாக மாற்றப்பட்ட அவலம்.
தமிழகத்தில் நேர்வழியில் காலூன்ற முடியாததால் கொல்லைப்புற வழியாக அதிகாரத்தைப் பிடிக்க ஆளுநர் மூலம் பாஜக செய்யும் தகிடுதத்தங்கள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.திமுக, அதிமுக என தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் போட்டி போட்டு ஊழல் செய்து மக் கள் சொத்தை சூறையாடி உள்ளனர்.இவற்றையெல்லாம் தமிழக மக்களிடம் எடுத்துரைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மார்ச் 2 முதல்6-ஆம் தேதி வரை மாநில அளவிலான பிரச்சார இயக்கம் தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி ஒன்பது மண்டலங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக