மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது



மகப்பேறு காலச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மூலம், இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்ச பெண்கள் பயனடைய உள்ளனர். ஒரு நிறுவனத்தில் பத்துக்கு மேல் ஊழியர்கள் இருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தை அந்த நிறுவனம் அமல்படுத்த வேண்டும். 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ள இந்த விடுப்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் விடுப்பு மட்டுமே வழங்கப்படும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
குழந்தைகளைத் தத்தெடுப்போருக்கு 12 வாரம் மகப்பேறு கால விடுப்பாக வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் தந்தைகளுக்கான விடுப்பு பற்றியும் விவாதித்த போதிலும் அதற்கான விதிகள் பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தில் மாநில அரசுகள் திருத்தங்கள் கொண்டுவரலாம் என மத்திய தொழிலாளர்த்துறை அமைச்ச்ர் பந்தாரு தத்தரேயா அறிவித்துள்ளார். அதனால் மாநில அரசுகள் விரும்பினால் மகப்பேறு கால விடுப்பை 26 வாரங்கள் மேல் அதிகரிக்கலாம்.

உலகில் முதன் முதலில் மகப்பேறு கால விடுப்பை அறிமுகப்படுத்தியது ஸ்வீடன். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் உலகில் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு தருவதில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் 50 வாரங்கள் விடுப்புடன். கனடாவும், இரண்டாவது இடத்தில் 44 வாரங்கள் விடுப்புடன் நார்வேயும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here