12வயதில் அப்பாவான கேரள சிறுவன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

12வயதில் அப்பாவான கேரள சிறுவன்

🌻கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும்.

🌻எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

🌻பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

🌻குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

🍊உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல்

🌻திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியின் உட்சுரப்பியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான பி.கே.ஜப்பார் இதுகுறித்துக் கூறும்போது, ''இளம் வயதிலேயே தந்தையாகியுள்ள சிறுவன் உரிய வயதுக்கு முன்பே பருவமடைந்திருக்கலாம்.

🌻இது வழக்கத்துக்கு மாறான நிலை அல்ல. ஆனால் 12 வயதில் ஒரு சிறுவன் தந்தையான சம்பவத்தை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை'' என்றார்.

🌻குழந்தை பிறந்து 18 நாட்கள் ஆகியிருந்தபோது, தந்தைக்கும், குழந்தைக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

🌻அதில் அவர்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கொண்டு தந்தைமை பரிசோதிக்கப்பட்டது.

🌻அதில் அவர்தான் குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

🌻தந்தையாகியுள்ள சிறுவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாய் மற்றும் தந்தை 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், வழக்கில் சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here