⌚இரவுசெய்திகள்⌚
🏹12\03\17🏹
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
💵💴500 ரூபாய் தாளில் கலந்து வரும் "கள்ள நோட்டு"..
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழித்து, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க வேண்டும் என தான் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என மோடி அறிவித்தார். இருந்தபோதிலும் புதியதாக வெளிவந்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் போன்றே தற்போது சில கள்ள நோட்டுகள் வெளிவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
💰📜🔎உஷார்... 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி பற்றாக்குறைக்கு வாய்ப்பு - திமுக எம்எல்ஏ PTR-ன் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்
தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதாகவும், தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜனின் ஆய்வறிக்கையை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
🔵🔴போதை பொருள் பிரச்சினையை தீர்க்க 'சிறப்பு அதிரடி படை' - கேப்டன் அமரிந்தர் சிங் உறுதி
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதைப் பொருள் பிரச்சினையை தீர்க்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும், மாநிலத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக மாற்றப்படும் என்று காங்கிஸ் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
✈📝சசிகலாவின் பதில் கடிதம்: 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி: சசிகலாவின் பதில் கடிதம் தொடர்பாக விளக்கமளிக்க ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 14ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் அணியினர் விளக்கம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
🛠⚒குவாரி விற்பனை மோசடி.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் தெலுங்கானாவில் கைது
ஹைதராபாத்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது திருவிக நகர் எம்எல்ஏவாக இருந்தவர் வ. நீலகண்டன். முன்னாள் அதிமுக எம்எல்ஏவான இவர், கோடிக்கணக்கில் பணம் புரளும் குவாரி பிசினஸ்களை செய்து வந்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் தெலுங்கானா மாநிலத்திற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது, குவாரி விற்பனை மோசடி வழக்கு தொடர்பாக வாரங்கலில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது மகன் விக்னேஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
🍌🍭இரோம் ஷர்மிளா செல்ல வேண்டிய தூரம் நீண்ட நெடியது" - மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து!
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 வருடங்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார். 'மக்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு போராடியவருக்கு இந்த நிலையா?' என்ற கேள்வி மணிப்பூர் மாநில மக்கள் மட்டுமல்லாது, நாட்டுமக்கள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
🏌⛳இந்தியன் ஓபன் கோல்ப் போட்டி: சிவ சங்கர் பிரசாத் சாவ்ரசியா வெற்றி
குர்கான்: இந்தியன் ஓபன் கோல்ப் போட்டியில் சிவ சங்கர் பிரசாத் சாவ்ரசியா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியன் ஓபன் கோல்ப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எஸ்.எஸ்.பி சாவ்ரசியா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🏹💥இலங்கை அரசை கண்டித்து நெல்லையில் மீனவர்கள், பொதுமக்கள் போராட்டம்
நெல்லை: இலங்கை அரசை கண்டித்து நெல்லையில் மீனவர்கள், பொதுமக்கள் 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🏹மார்ச் 15 அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் - ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தேர்வா?
மார்ச் 15 காலை 11 மணிக்கு அதிமுக ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், மார்ச் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அவைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🏹பெண் தற்கொலை படை தீவிரவாதிகள் சுட்டு கொலை
நைஜீரியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இரண்டு பெண் தற்கொலை படை தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.
🏹📺ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்தார் அமைச்சர் ஜெட்லி
ஹரித்துவாரில் இருந்து டெல்லி புறப்பட்ட போது மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது கால் தடுக்கி கீழே விழுந்தார்.
📡மீனவர் போராட்டக் களத்தில் பிரேமலதா விஜயகாந்த்!
இந்திய மீனவர் பிரிட்ஜோவை, இலங்கைக் கடற்படை சுட்டு கொன்றதையடுத்து, கடந்த ஆறு நாட்களாக தங்கச்சி மடத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தே.மு.தி.க.வின் பிரேமலதா விஜயகாந்த், இன்று தங்கச்சிமடம் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு அவர் ஆறுதல் கூறினார்.
📡📺கூட்டணி இறுமாப்பால் தோல்வி; முலாயம் கருத்து
லக்னோ: காங்கிரசுடனான கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தியும், இறுமாப்பும் தான் சமாஜ்வாதி தோல்விக்கு காரணம் என முலாயம் சிங் கூறினார்.
📡📺உபி, உத்தரகாண்டில் முதல்வர்கள் யார். முடிவெடுக்கக் கூடியது பாஜக ஆட்சிமன்றக் குழு
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக அம்மாநில முதல்வர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் கூடியது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 6 மணியளவில் ஆட்சி மன்றக் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
📡📺இந்திய மக்களை வீழ விடமாட்டேன் : மோடி
புதுடில்லி: இந்திய மக்களை வீழ விட மாட்டேன் என டில்லியில் நடந்த நன்றி தெரிவிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சுஉ.பி., தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதையடுத்து டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாதாக அசோகா சாலையில் மோடி பேரணியாக நடந்து வந்து பொதுமக்களின் வரவேற்ப்பை ஏற்று கொண்டார்.கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் :'' உ.பி.,தேர்தல் வெற்றிக்காக உழைத்த அத்தனை பா.ஜ.,தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்கள் அனைவருக்கும் எனது ஹோலி வாழ்த்துக்களை தெரவித்து கொள்கிறேன். உ.பி.,யில் பா.ஜ., வெற்றியை பார்த்து எதிர்கட்சிகள் நடுங்கி போய் உள்ளனர்.
வாக்குபதிவு அதிகரிப்பு நல்ல முன்னேற்றத்தை காட்டுகிறது. இந்த மாபெரும் வெற்றி அனைவரையும் தேர்தல் குறித்து ஆய்வு நடத்த வைத்துள்ளது. புதிய இந்தியா வளர்ந்து வருகிறது. இந்த தேர்தலுக்கு பிறகு புதிய இந்தியாவில் ஒரு விடியல் ஏற்பட்டுள்ளதை நான் காண்கிறேன்.
இந்திய மக்களை வீழ விட மாட்டேன். ஏழைகளுக்கான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. '' என கூறினார்.
📡📺கடலூர் :காட்டுமன்னார்
கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
📡📺காங்கிரசுடனான கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தியும், இறுமாப்பும் தான் சமாஜ்வாதி தோல்விக்கு காரணம் : முலாயம் சிங்
📡📺கடலூர்-புதுச்சேரி சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.
📡📺ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்த கோரி கிராம மக்கள் போராட்டம்
திருவாரூர்: ஆமூரில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்த கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை நிறுத்தக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
📡📺தங்கச்சிமடத்தில் 6 நாளாக நடைபெற்று வந்த மீனவர் போராட்டம் வாபாஸ்
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் 6 நாளாக நடைபெற்று வந்த மீனவர் போராட்டம் வாபாஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனவர் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் அறிவித்துள்ளார்.
பிரிட்ஜோ-வின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யவும் போராட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
📡📺ஆர்.கே.நகரில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன்: திருநாவுக்கரசர் பேட்டி
ஆர்.கே.நகரில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.மக்கள் ஏற்காததால்தான் பஞ்சாபிலும், கோவாவிலும் பாஜக தோற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநில பிரச்னைகளின் அடிப்படையில்தான் தேர்தல் முடிவை பார்க்க வேண்டும்என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
📡📺குவாரி விற்பனை மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது
குவாரி விற்பனை மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். திரு.வி.க.நகர் முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டனை வாரங்கல்லில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நீலகண்டனின் மகன் விக்னேஷையும் தெலங்கானா போலீஸ் கைது செய்துள்ளது.
📡📺சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணியில் எண்ணெய் கசிவு!
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் போது எண்ணெய் போன்ற திரவம் கசிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கசிவு ஏற்பட்டு வரும் இடத்துக்கு விரைந்து வந்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
📡📺நக்சல் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
நக்சல் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சத்தீஷ்கரில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சங்கரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡📺📡📺📡📺📡📺
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக